Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் கனமழை தொடங்கியது.. இன்று 10 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
 

Heavy Rain in 10 districts - Today Weather Report
Author
First Published Oct 5, 2022, 1:35 PM IST

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மத்திய மேற்கு வங்கக்கடலில்‌ நிலவும்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக,

05.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, கடலூர்‌, திருவண்ணாமலை, வேலூர்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடியின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

06.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மயிலாடுதுறை, அரியலூர்‌, பெரம்பலார்‌, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளுர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

07.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மயிலாடுதுறை, அரியலூர்‌, பெரம்பலார்‌, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளுர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

08.10.2022 மற்றும்‌ 09.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சேலம்‌, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, கடலூர்‌, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்சி , புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அப்டேட்

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

05.10.2022 மற்றும்‌ 06.10.2022: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, வட தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌

05.10.2022 முதல்‌ 08.10.2022 வரை : குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

09.10.2022: மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ தமிழக கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேலும் படிக்க:இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாகும்.. சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கூடுதல் மழை.. வானிலை மையம்

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios