சூர்யா சிவாவிற்கு கைலாசா தர்மரட்சகர் விருது வழங்கி கவுரவித்த நித்யானந்தா.! எதற்காக விருது தெரியுமா.?
பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருது கொடுத்துள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த வீடியோவை சூர்யா சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். மேலும் நடிகையுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமானார். இந்தநிலையில் அவர் மீது கொடுக்கப்பட்ட கற்பழிப்பு புகார் தொடர்பான் புகாரில் தலைமைறைவாக இருந்த நித்யானத்தாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஜாமினில் வெளிவந்தவர் மதுரை ஆதினத்தில் குடிபுகுந்தார். தான் தான் அடுத்த ஆதினம் கூறிவந்த நிலையில் அங்கும் பிரச்சனை ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறி நித்யானந்தா கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார்.
தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு; சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம்;- தமிழிசை சவுந்திரராஜன்
கைலாசா என்ற நாட்டுக்கு அதிபர் என்று தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட நித்தியானந்தா, கைலாசா நாட்டுக்கென்று தனி நாணயம், விசா என்று உருவாக்கி உள்ளார். இதனிடையே உடல் நிலை பாதிக்கப்பட்ட நித்யானந்தா இறந்து விட்டதாக தகவல் வெளியான நிலையில் அதனை மறுத்தும் முகநூலில் பதிவிட்டார். இந்தநிலையில் நீண்ட காலமாக தனது உருவத்தை காட்டாமல் இருந்த நித்யானந்தா திடீரென பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருது கொடுத்துள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி உற்சவம்; 108 வீணை இசை வழிபாடு
திமுகவின் மாநிலங்களைவை உறுப்பினராகவும் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் திருச்சி சிவாவின் மகனான சூர்யா சிவா கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த அவருக்கு நித்யானந்தா கைலாசா தர்மரட்சகர் விருது வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோவை சூர்யா சிவா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் தோன்றும் நித்தியானந்தா சூர்யா சிவாவிற்கு கைலாசா தர்மரட்சகர் விருது வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் நன்றியுரை தெரிவிக்கும் சூர்யா, தான் திருவண்ணாமலையாரின் பக்தர் என்றும் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து விருது கிடைத்தது தான் பாக்கியமாக நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.