வட சென்னை கிரேட் எஸ்கேப்.. ஆனா தெற்கு மேற்குனு வெளுத்து வாங்கப்போகும் கனமழை - அலெர்ட் கொடுத்த வெதர் மேன்!
Chennai Rain : சென்னையில் அடுத்த 10 நாள்களுக்கு பரவலாக நல்ல மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக வெதர் மேன் கூறியுள்ளார்.
பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் அதிக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் 10 நாட்களுக்கு சென்னையில் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை நோக்கி வீசும் காற்றின் வேகமானது மாறுபடுவதன் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றும் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்பே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை வெளுத்து வாங்கி வருகிறது.
வெளியூர்காரனுக்கு இங்க என்னடா வேலை? காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்ற நபர் அடித்து கொலை
இந்நிலையில் சென்னையை நோக்கி அதீத புயல் நெருங்கி வருவதால், வடசென்னை பகுதிகளைத் தவிர மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு சென்னை பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும். இந்த நிலை அடுத்த 10 நாள்களுக்கு தொடரும் என்றும் தமிழக வெதர்மேன் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்திருக்கிறார்.
இன்று மாலையும் மதுரவாயில், போரூர், வானகரம், ஐயப்பன்தாங்கல் மற்றும் ராமாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. காலை நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வரும் அதே நேரம், மாலை நேரத்தில் சென்னையை அதிக மழை ஆட்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.