வெளியூர்காரனுக்கு இங்க என்னடா வேலை? காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்ற நபர் அடித்து கொலை
திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன் (வயது 17). இவர் திருச்சி தந்தை பெரியார் கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஸ்ரீரங்கம், கணபதி நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்ற ரஞ்சித் கண்ணன், வீட்டின் அருகில் பொங்கி ஓடிய காவிரி ஆற்றை வேடிக்கை பார்ப்பதற்காக உறவினருடன் ஆற்றங்கரைக்கு சென்றுள்ளார்.
ஆற்றங்கரையில் உறவினருடன் சேர்ந்த ஆற்றை வேடிக்கை பார்த்தபடி நடந்து சென்ற ரஞ்சித் கண்ணனை அப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த 5 பேர் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெளியூர் கரானான உனக்கு இங்கு என்ன வேலை என்று கூறி உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கி உள்ளனர். இதனால் நிலைக்குலைந்த ரஞ்சித் கண்ணன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
கர்ப்பிணியை நிர்வாணமாக்கி சாலையில் நடக்கவைத்த கொடூரம்; ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேலும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி ரஞ்சித் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவத்தில் தொடர்புடைய 5 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே மாணவனின் இறப்பு குறித்து தகவல் அறிந்த முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் மாணவனின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நமது விராலிமலையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரஞ்சித் கண்ணனை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்த கோர சம்பவத்தை தொடர்ந்து, இன்று அம்மாணவரின் இல்லத்துக்கு நேரில் சென்று அன்பு மகனை இழந்து வாடிய அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
ஆன்மீக நிகழ்ச்சியில் நிகழ்ந்த சோகம்; கோவில் சுவர் விழுந்து 9 சிறுவர்கள் பலி
எந்தத் தவறும் செய்திடாத தன் மகனை மதுபோதைக் கும்பலிடம் பறிகொடுத்து தவிக்கும் அக்குடும்பத்தினருக்கு இதுவரை அரசு சார்பில் ஆறுதலோ, நிவாரணமோ அறிவிக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. ஆகவே, உடனடியாக முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டிய அதேநேரத்தில், அக்குடும்பத்தின் சூழலை கருத்தில் கொண்டு உரிய நிவாரணத்தை வழங்கிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.