கர்ப்பிணியை நிர்வாணமாக்கி சாலையில் நடக்கவைத்த கொடூரம்; ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
ராஜஸ்தான் மாநிலத்தில் கர்ப்பிணியை நிர்வாணமாக்கி சாலையில் வலுக்கட்டாயமாக நடக்கவைத்த சம்பவத்தில் ஓராண்டு கழித்து குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு.
ராஜஸ்தான் மாநிலம் நிக்லகோட்டா கிராமத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி 7 மாத கர்ப்பிணியை அவரது கணவர் உட்பட 17 பேர் நிர்வாணமாக்கி சாலையில் கட்டாயப்படுத்தி நடக்கவைத்து துன்புறுத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து அப்பெண் காவல் நிலையதில் தன்னை துன்புறுத்தியவர்களுக்கு எதிராக புகார் அளித்தார்.
ஆன்மீக நிகழ்ச்சியில் நிகழ்ந்த சோகம்; கோவில் சுவர் விழுந்து 9 சிறுவர்கள் பலி
கர்ப்பிணி பெண்ணின் புகார் குறித்து மாவட்ட காவல்துறை சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொண்டது. வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் பெண்ணை கொடுமை படுத்திய கணவர் உள்பட 17 நபர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் இதே வழக்கில் தொடர்புடைய 3 பெண்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
49 பெண்களுக்கு காதல் வலை, 5 முறை திருமணம்; காதல் மன்னனை பொறி வைத்து பிடித்த போலீஸ்
இதனைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டில் பெண்கள் தெய்வங்களுக்கு இணையாக மதிக்கப்பட்டனர். பழங்காலத்தில் வேதங்களில் பெண்கள் கௌரவிக்கப்படுகின்றனர். ஆனால், தற்போது கலியுகத்தில் பெண்கள் மீதான வன்முறையும், அட்டூழியங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதே போன்ற குற்றம் மணிப்பூரிலும் நடைபெற்றது. இத்தகைய குற்றங்கள் பெண்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக காயப்படுத்துகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.