தமிழ்நாட்டில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்த நிலையில், இன்று வரத்து அதிகாரிப்பால் விலை குறைந்துள்ளது.

இந்தியாவை பொறுத்த வரை தக்காளி என்பது சமையலுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருள். இன்னும் சொல்ல போனால் அனைத்து உணவுகளுக்குமே தக்காளி தேவைப்படுகிறது. தக்காளி இல்லாமல் சமைக்கும் உணவுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதனால் தக்காளி என்பது சமையலில் தவிர்க்க முடியாததாக உள்ளது. எனவே தக்காளி விலையும் முக்கியமாக கருதப்படுகிறது. தக்காளியின் விலை சமையலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தக்காளி விலை தற்போது தாறுமாறாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளியின் விலை, 2 நாட்களுக்கு முன்பு கிடுகிடுவென உயர்ந்து ரூ.70-க்கு விற்கப்பட்டது. இந்த விலை மேலும் உயர்ந்து தற்போது ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் ரூ.130 –க்கு கூட தக்காளி விற்கப்படுவதாக கூறப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாள் ஒன்றுக்கு 1000 டன் வரை தக்காளி வரும் என்றும், ஆனால் தற்போது தக்காளி வரத்து 300 டன் என்ற அளவில் குறைந்துள்ளதால் தான் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அர்ச்சகர் நியமனத்தில் சாதி பார்க்கக்கூடாது.. இது கருணாநிதி முயற்சிக்கு கிடைத்த வெற்றி.. திருமாவளவன்..!

வரத்து குறைவு, கோடை மழை உள்ளிட்ட காரணங்கள் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் விலையை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தக்காளி விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி மொத்த விற்பனையில் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் கிலோ 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதே போல் புறநகர் பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.30 குறைந்து ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, 1100 டன் தக்காளி வரத்து வரும். இந்த நிலையில் இன்று 700 டன் தக்காளி வந்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கூடுதல் தக்காளி வாகனங்கள் வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வரும் நாட்களில் தக்காளி வரத்தை பொறுத்தே விலை நிலவரம் இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

குட்நியூஸ்.. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் 5 ஆண்டுகளாக நீட்டிப்பு..!