குட்நியூஸ்.. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் 5 ஆண்டுகளாக நீட்டிப்பு..!
தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) அதிகாரிகள் ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆய்வுசெய்து அவற்றின் அங்கீகாரத்தை புதுப்பிப்பது வழக்கம்.
ஓராண்டு அனுமதி பெற்றிருந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கான அங்கீகாரதத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அதிகாரிகள் ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆய்வுசெய்து அவற்றின் அங்கீகாரத்தை புதுப்பிப்பது வழக்கம். ஆய்வின்போது குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரியிடம் விளக்கம் கேட்கப்படும். குறிப்பிட்ட காலக்கெடுக்குள் குறைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டால், அங்கீகாரம் வழங்கப்படும். அப்படி குறைகள் சரிசெய்யப்படவில்லை என்றால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
இதையும் படிங்க;- சென்னையே இனி ஒளிரப்போகுது.!! சென்னை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்
அதன்படி, கடந்த மாதம் தமிழகத்தில் என்எம்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்தபோது, பேராசிரியர்கள், மாணவர்களுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு மற்றும் சிசிடிவி கேமராக்கள் முறையாக இல்லாததும், உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, 3 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க;- கொரோனா காலத்தில் வேலை பார்த்த போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை
இதனையடுத்து, குறைகள் சரி செய்யப்பட்டு ஆணையத்திற்கு அரசு தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பேரில் தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் 3 கல்லூரிகளிலும் மறுஆய்வு நடத்தினர். இந்நிலையில், சென்னை ஸ்டான்லி, தருமபுரி ஆகிய மருத்துவக் கல்லுாரிகளுக்கு ஐந்தாண்டுகளுக்கு அங்கீகாரம் அளித்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஓராண்டு அனுமதி பெற்றிருந்த கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரிக்கும், ஐந்தாண்டுகளுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. திருச்சி மருத்துவக் கல்லுாரிக்கான அங்கீகாரம் தொடர்பான அறிவிப்பு இதுவரை வரவில்லை.