கொரோனா காலத்தில் வேலை பார்த்த போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவசர தேவைகளுக்காக பணிபுரிந்த போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

Special incentive for transport employees who worked during COVID-19 pandemic

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை இன்று தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட போக்குவரத்துத்துறை பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோது அவசரகால தேவைகளுக்காக வேலை செய்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்க இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்காக ரூ.17.15 கோடியை ஒதுக்கீடு செய்வதாகவும், ஊதிய நிலுவைத் தொகையை வழங்க ரூ.171.05 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

முட்டாள்தனமான கேள்வி... நான் என்ன காமெடியானா? செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை ஆவேசம்

Special incentive for transport employees who worked during COVID-19 pandemic

தமிழ்நாடு அரசு சார்பில் வெளியாகியுள்ள இதொடர்பான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணி புரிந்து வரும் 1.14 லட்சம் பணியாளர்களால், தினமும் 20,111 பேருந்துகள் வரை தமிழ்நாடு முழுவதும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் மக்களின் போக்குவரத்திற்காக இயக்கப்பட்டு பயணிகள் தினமும் பயன் பெறுகின்றனர். 1.70 கோடி

கொரோனா பெருந்துயர் காலமான 2020, 2021 ஆம் ஆண்டுகளில் மக்களின் உயிர்காக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பின்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அத்தியாவசியான பேருந்து சேவைகளுக்காக, பேருந்துகளை இயக்கின. அப்போது, போக்குவரத்துப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிந்தனர். அவ்வாறு பணிபுரிந்த தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் பேரில் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடி வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

வேறு சாதி பையனை காதலித்த மகளைக் கொன்ற தந்தை! மனமுடைந்து ரயிலில் பாய்ந்த காதலன்!

Special incentive for transport employees who worked during COVID-19 pandemic

மேலும், கொரோனா காலத்திற்கு பின், போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்த போதிலும், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு. 14 வது ஊதிய ஒப்பந்தத்தை 01-09-2019 முதல் அமல்படுத்தி, ஊதிய உயர்வு அளித்து, அதன்படி தற்போது ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 2022 முதல் 096060 2022 வரை உள்ள காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகையான ரூ.171.05 கோடி வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் பேரில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அப்துல் கலாம் தெரு! ஔரங்கசீப் தெருவின் பெயர் மாற்றம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios