டெல்லியில் அப்துல் கலாம் தெரு! ஔரங்கசீப் தெருவின் பெயர் மாற்றம்!
டெல்லி லுட்யென்ஸில் உள்ள ஔரங்கசீப் தெருவுக்கு பெயர் மாற்றப்பட்டு, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தெரு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டெல்லி லுட்யென்ஸில் உள்ள ஔரங்கசீப் தெருவுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தெரு என்று பெயர் சூட்டுவதாக டெல்லி மாநகராட்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. என்டிஎம்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அவுரங்கசீப் தெரு அப்துல் கலாம் சாலையை பிரித்வி ராஜ் சாலையுடன் இணைக்கிறது. ஆகஸ்ட் 2015 இல் என்டிஎம்சி அவுரங்கசீப் சாலையின் பெயரை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சாலை என்று மாற்றியது. இந்நிலையில், அவுரங்கசீப் பெயரில் இருந்த தெருவின் பெயரையும் மாற்றி அப்துல் கலாம் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிலவுக்குச் செல்லும் சந்திரயான் 3! ஜூலை 13ஆம் தேதி விண்ணில் ஏவப்படும்... இஸ்ரோ அறிவிப்பு
“அவுரங்கசீப் லேனின் பெயரை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் லேன் என்று மாற்றுவதற்கு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது” என்று என்டிஎம்சி துணைத் தலைவர் சதீஷ் உபாத்யாயா கூறியுள்ளார்.
முன்னதாக 2015ஆம் ஆண்டில், அவுரங்கசீப் சாலைக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் பெயரைச் சூட்ட என்டிஎம்சி முடிவு செய்தபோது அதனை முஸ்லிம் அமைப்புகள் எதிர்த்தன. வேண்டுமென்றே இந்த பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அந்த அமைப்புகள் குறிப்பிட்டன. இது வரலாற்றை சிதைக்கும் போக்கும் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
கர்நாடகாவில் ரேஷன் கடைகளில் அரிசிக்குப் பதில் பணம்!
"இது திட்டமிட்ட முயற்சி. ஏனென்றால், அவுரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டவுடன், முகலாய பேரரசர் அவுரங்கசீப் கல்லறை அமைந்துள்ள மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்திற்கு பெயரை மாற்றப்போவதாக சிவசேனா கூறியது. முஸ்லிம் பேரரசர்களின் பெயரைத் தாங்கிய நகரங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயரை மாற்ற விரும்புகிறார்கள்," என்று டபிள்யூ.பி.ஐ. கட்சியின் தலைவர் இல்யாஸ் தெரிவித்தார்.
பிரபல வரலாற்றாசிரியர் நாராயணி குப்தா கூறுகையில், மக்களுக்கு வரலாற்று உணர்வு இல்லாததால் இதுபோன்ற பிரச்சினைகள் எழுகின்றன என்கிறார். அக்பர், ஷாஜஹான், ஒளரங்கசீப் போன்ற முகலாய ஆட்சியாளர்களின் பெயர்கள் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்டவை என்று அவர் சொல்கிறார்.
பான் கார்டில் பேரு தப்பா இருக்கா? ஆன்லைனில் ஆதார் eKYC மூலம் ஈசியாக பெயரை மாற்றலாம்!