Asianet News TamilAsianet News Tamil

நிலவுக்குச் செல்லும் சந்திரயான் 3! ஜூலை 13ஆம் தேதி விண்ணில் ஏவப்படும்... இஸ்ரோ அறிவிப்பு

நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 13ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Launch Of India's Moon Mission, Chandrayaan-3, On July 13 At 2:30 pm
Author
First Published Jun 28, 2023, 6:27 PM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தை ஏவும் தேதியை உறுதி செய்துள்ளது. ஜூலை 13ஆம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) நிலவின் தென்துருவம் குறித்து ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தில் சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது. இதனை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக 2019ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பினார்கள்.

கர்நாடகாவில் ரேஷன் கடைகளில் அரிசிக்குப் பதில் பணம்!

Launch Of India's Moon Mission, Chandrayaan-3, On July 13 At 2:30 pm

இந்த சந்திரயான்-2 விண்கலம் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. ஆனாலும் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ‘லேண்டர்’ கலன் தரையிறங்கும் முன்னே நிலவில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அது செயலிழக்க நேரிட்டது. விண்கலத்தின் இன்னொரு பகுதி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

தற்போது ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு எடுத்துள்ளது. நிலவை ஆர்பிட்டர் ஏற்கனவே சுற்றுவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்களை மட்டுமே அனுப்பினால் போதும் என திட்டமிடப்பட்டுள்ளது. வடிவமைப்பு பணிகள், சோதனை ஓட்டங்கள் ஆகியவை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மீது சந்திரயான்-3 விண்கலம் வருகிற ஜூலையில் விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது.

போதிய ஆதாரம் இல்லை... சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை; வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு

Launch Of India's Moon Mission, Chandrayaan-3, On July 13 At 2:30 pm

இதைத் தொடர்ந்து விண்ணில் அனுப்பி வைப்பதற்கான முன்கட்டப் பணிகளை முன்னிட்டு சந்திரயான்-3 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்துக்கு அண்மையில் கொண்டு வரப்பட்டது. முன்பு அனுப்பிய சந்திரயான்-2 மாதிரி இல்லாமல், 42 நாட்களில் லேண்டர் கலனை சந்திரனில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

சந்திரயான்-3 அபாயங்களைக் குறைப்பதற்கும் வெற்றிகரமான ஏவப்படுவதை உறுதி செய்வதற்கும் கடுமையான சோதனை மற்றும் சரிபார்ப்பு செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சந்திர பேலோட் போன்றவற்றில் கடந்த முறை நேர்ந்த தவறுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் சந்திரயான் 3 மேம்படுத்தப்பட்டுள்ளது.

பான் கார்டில் பேரு தப்பா இருக்கா? ஆன்லைனில் ஆதார் eKYC மூலம் ஈசியாக பெயரை மாற்றலாம்!

Follow Us:
Download App:
  • android
  • ios