கர்நாடகாவில் ரேஷன் கடைகளில் அரிசிக்குப் பதில் பணம்!

அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 10 கிலோ இலவச அரசியில் 5 கிலோ அரிசிக்குப் பதிலாக ரூ.170 பணம் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.எச்.முனியப்பா தெரிவித்துள்ளார்.

Karnataka to provide cash instead of rice amid procurement shortage

கர்நாடகாவில் தேவையான அளவுக்கு அரிசி கொள்முதல் மற்றும் விநியோகம் உறுதி செய்யப்படும் வரை ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. ஒரு கிலோ அரிசிக்கு 34 ரூபாய் வீதம் 5 கிலோ அரிசிக்கு ரூ.170 வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் கே.எச்.முனியப்பா தெரிவித்துள்ளார்.

ஜூன் 28ஆம் தேதி புதன்கிழமை நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், அரசி கொள்முதல் தட்டுப்பாடு காரணமாக ஒரு ரேஷன் கார்டுக்கு 5 கிலோ அரிசியும் மீதி 5 கிலோ அரிசிக்குப் பதிலாக பணமும் வழங்கப்பட உள்ளது.

பழனி புலிப்பாணி ஆசிரமத்திற்குச் சென்ற முதல்வரின் சம்பந்தி வேதமூர்த்தி!

Karnataka to provide cash instead of rice amid procurement shortage

இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்கிய அமைச்சர் முனியப்பா, "அரிசி கொள்முதல் செய்ய பல்வேறு நிறுவனங்களை அணுகினோம், ஆனால் முடியவில்லை. எனவே, எங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற, இந்த மாற்று தீர்வைச் செய்ய முடிவு செய்தோம்," என்றார். இந்த முடிவின் நிதி தாக்கங்கள், சாத்தியமான இழப்புகள் அல்லது ஆதாயங்கள் உள்ளிட்டவற்றை அரசாங்கம் இன்னும் கணக்கிடவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எச். கே. பாட்டீல், "நிலையான அரிசி விநியோகத்தை உறுதி செய்யும் வரை 5 கிலோ அரிசிக்குப் பதில் ரொக்கமாக வழங்க முடிவு செய்துள்ளோம்" என்றார். "ரேஷன் கார்டில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு நபருக்கு ரூ.170 (34x5) குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இது தவிர 5 கிலோ அரிசி எப்போதும் போல வழங்கப்படும்" எனவும் கூறினார்.

திடீர் பயணமா? இந்த வழியில் புக் செய்தால் ரயில் டிக்கெட் கிடைப்பது உறுதி! முழு விவரம் இதோ...

Karnataka to provide cash instead of rice amid procurement shortage

கர்நாடகா மாநிலம் அதன் முதன்மைத் திட்டமான அன்ன பாக்யாவுக்கான அரிசி கொள்முதல் செய்ய சவால்களை எதிர்கொண்டுள்ளது. மத்திய அரசு அரிசி வழங்க மறுப்பதாக முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது. இந்த விவகாரம் அந்த மாநிலத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அரிசிக்குப் பதிலாக ரொக்கமாக வழங்குவதால் இத்திட்டத்திற்கு ஆகும் செலவு, சுமார் 10,000 கோடி ரூபாயைத் தாண்டி அதிகரிக்கும் எனச் சொல்லப்படுகிறது.

மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 4.42 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு இன்னும் ஐந்து கிலோ இலவச அரிசி வழங்க ஒன்றுக்கு 2.29 லட்சம் மெட்ரிக் டன் அரிசி அவசியம். இதனால், இத்திட்டத்திற்கான தேவையை பூர்த்தி செய்ய, கர்நாடக அரசு மாற்று கொள்முதல் ஆதாரங்களை ஆராய்ந்து வருகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஐந்து கிலோ கிராம் அரிசி வழங்கிவரும் நிலையில், அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

மணிப்பூர் களத்தில் ராகுல் காந்தி! 2 நாள் பயணம்... வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்பு!

Karnataka to provide cash instead of rice amid procurement shortage

இந்த மாத தொடக்கத்தில், தேவையான அளவு அரிசியை வழங்க ஒப்புக்கொண்ட இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ), பின்னர் போதுமான இருப்பை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி தனது முடிவை மாற்றியது. இதனை விமர்சித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.

மத்திய அரசின் நிலைப்பாடு ஏழைகளுக்கு எதிரானது என்றும் வெறுப்பு அரசியலை அடிப்படையாகக் கொண்டது என்றும் சித்தராமையா சாடியுள்ளார். அன்ன பாக்யா திட்டத்தைத் தடுக்க மத்திய அரசு சதி செய்வதாக குற்றம் சாட்டிய அவர், இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட அழைப்பு விடுத்துள்ளார்.

பான் கார்டில் பேரு தப்பா இருக்கா? ஆன்லைனில் ஆதார் eKYC மூலம் ஈசியாக பெயரை மாற்றலாம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios