பழனி புலிப்பாணி ஆசிரமத்திற்குச் சென்ற முதல்வரின் சம்பந்தி வேதமூர்த்தி!
முதல்வரின் சம்பந்தி வேதமூர்த்தி பழனி முருகன் கோயில் அடிவராத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்திற்குச் சென்று சிவானந்த புலிப்பாணி பாத்திர சாமியைச் சந்தித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த நெருக்கமான உறவினர் ஒருவர் பழனிக்கு வந்து முருகன் கோயில் அடிவராத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்துக்குச் சென்றிருக்கிறார். முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் இந்த திடீர் விசிட் குறித்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்வதை அடிக்கடி பார்த்திருப்போம். இந்த முறை பழனியில் அனைவரையும் கவர்ந்திருப்பவர் ஸ்டாலினுக்கு சம்பந்தியான வேதமூர்த்தி. சமீபத்தில் பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் பேசப்பட்ட முதல்வரின் மருமகன் சபரீசனின் தந்தை தான் இந்த வேதமூர்த்தி.
உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் மாற்றம்; அமுதா ஐ.ஏ.எஸ். அதிரடி உத்தரவு... பின்னணி என்ன?
இவர் அண்மையில், பழனியில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்துக்கு சென்று ஸ்ரீமத் போகர் பழனி ஆதினத்தின் ஆசி பெற்று பிரசாதம் வாங்கி வந்திருக்கிறார். இந்த ஆசிரமத்தில் உள்ள சிவானந்த புலிப்பாணி பாத்திர சாமியிடம் ஆசி பெற தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வேதமூர்த்தி அங்கு சென்றபோது சிறப்பாக சால்வை அணிவித்து பலமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து, வேதமூர்த்தியின் இந்த திடீர் விசிட்டுக்கு பின்னணி என்ன என்பது பேசுபொருள் ஆகியுள்ளது.
முதல்வரின் மகள் செந்தாமரையின் கணவரான சபரீசன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் உறவினர். ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்தபோது முதலில் பழனிவேல் தியாகராஜனுக்கு நிதி அமைச்சர் பதவி கிடைத்ததற்கு சபரீசனின் செல்வாக்குதான் காரணம் என்றும சொல்லப்படுகிறது.
திடீர் பயணமா? இந்த வழியில் புக் செய்தால் ரயில் டிக்கெட் கிடைப்பது உறுதி! முழு விவரம் இதோ...
பிடிஆர் ஆடியோ லீக் விவகாரத்தில் சபரீசன் பெயர் அடிப்பட்டது அவரது குடும்பத்தினரை சற்று கலக்கம் அடைய வைத்த்து. அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை ரெய்டு விவகாரத்திலும் சபரீசன் பெயர் அடிபடுகிறது. செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்தால் முதல்வரின் குடும்பத்தினர் தொடர்பான ரகசியங்கள் அம்பலமாகும் என்றும் கூறுகிறார்கள்.
இந்தச் சூழலில் மகன் சபரீசனுக்காக வேண்டுதல் நடத்தி, பரிகாரங்கள் செய்வது குறித்து பேசுவதற்காக வேதமூர்த்தி புலிப்பாணி ஆசிரமத்துக்குப் போயிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதுபோல கோவில்களுக்கும் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்குச் செல்வதும் சகஜம் என்பதால், இது அப்படி ஒரு சாதாரண விசிட் தான் என்றும் சொல்லப்படுகிறது.
மணிப்பூர் களத்தில் ராகுல் காந்தி! 2 நாள் பயணம்... வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்பு!