சென்னையே இனி ஒளிரப்போகுது.!! சென்னை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்
சென்னை மாநகராட்சி முதன்முறையாக தெருவிளக்குகளை Refurbish செய்து பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 2. 90 லட்சம் தெரு விளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பேருந்து சாலைகளில் உள்ள தெரு விளக்குள், உட்புற சாலைகளில் உள்ள தெரு விளக்குகள், பூங்காவில் உள்ள விளக்குகள், உயர் கோபுர விளக்குகள் என்று பல்வேறு வகையான விளக்குகள் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த எல்இடி விளக்குகள் மூலம் சென்னை மாநகராட்சிக்கான மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது சென்னையின் பல்வேறு இடங்களில் தெரு விளக்குள் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இதனுடன் பழைய தெரு விளக்குகளை refurbish செய்து பயன்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, புதிதாக பல்வேறு இடங்களில் எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த 2013ம் ஆண்டு வாங்கி எல்இடி விளக்குகளின் வாரண்டி 7 ஆண்டுகள் ஆகும்.
தெரு விளக்குகளில் ஏதாவது சிறிய பிரச்சனை ஏற்பட்டால் மாநகராட்சியே உதிரி பாகத்தை வாங்கி சரி செய்யும். ஒன்று மேற்பட்ட பிரச்சனை ஏற்பட்டால் அதை refurbish செய்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக 2 ஆயிரம் தெரு விளக்குகள் refurbish செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தால், புதிதாக தெரு விளக்குகள் வாங்கும் செலவும் குறைகிறது. மேலும் ஒரு தெரு விளக்கின் வாழ் நாள் காலமும் அதிகிரிக்கிறது” என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இது சென்னை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இனிதான் ஆரம்பமே..! தமிழகத்தில் இந்த இடங்களில் 5 நாட்களுக்கு கொட்டப்போகுது மழை - முழு விபரம்