Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today | தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதோ...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 6 ரூபாயும் சவரனுக்கு ரூ.48 உயர்ந்தது

Gold Price Today
Author
Chennai, First Published Nov 25, 2021, 11:11 AM IST

தொடர்ந்து ஏறு முகத்திலேயே இருந்து அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை இரண்டு நாட்களாக இறங்கி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று 4 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட வர்த்தக நெருக்கடிகள் காரணமாக, முதலீட்டாளர்கள் பலரும் தங்கள் முதலீடுகளை பங்கு சந்தை, ரியல் எஸ்டேட் ஆகியவற்றிலிருந்து தங்கத்துக்கு மாற்றத் தொடங்கியிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் உயர்ந்து வந்த தங்கம் விலை சர்வதேச சந்தை மதிப்பு குறைவு காரணமாக இரண்டு நாட்களாக சரிந்து வருகிறது.

இன்றைய தங்கம் விலை 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் (22 காரட்) 4,496 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை (22 காரட்)  32 ரூபாய் குறைந்து 35,968 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கமும் ஒரு கிராம் 4 ரூபாய் குறைந்து 4905 ரூபாயாகவும், ஒரு சவரன் 32 ரூபாய் குறைந்து 39,240 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலையில் சிறிய மாற்றம். ஒரு கிராம் வெள்ளி 20 பைசா உயர்ந்து 67 ரூபாய் 80 காசுகளுக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 200 ரூபா உயர்ந்து ரூபாய் 67,800 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios