Asianet News TamilAsianet News Tamil

இனி மூன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம் - நிறைவேற்றப்படுமா பி.எட். ஆசிரியர்களின் கோரிக்கை...

From the third grade to the first computer science lesson - will be passed to B.Ed. Teachers request ...
From the third grade to the first computer science lesson - will be passed to B.Ed. Teachers request ...
Author
First Published Dec 26, 2017, 6:23 AM IST


ஈரோடு

கணினி அறிவியலை 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தனிப்பாடமாகக் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், மல்லிகை அரங்கில், தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாநிலப் பொருளாளர் கார்த்திக் தலைமை வகித்தார். மகளிரணித் தலைவி இரங்கநாயகி முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் குமரேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தில், "புதிய வரைவு பாடத்திட்டத்தில் கணினி அறிவியலை 3-ஆம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை தனிப்பாடமாகக் கொண்டுவர வேண்டும்.

தமிழக அரசால் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட 765 கணினி அறிவியல் பணியிடங்களை விரைவில் அரசு பள்ளிக்கூடங்களில் நிரப்பவேண்டும்.

அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்களில் ஒரு கணினி ஆசிரியரை பணிநியமனம் செய்ய வேண்டும்.

அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் நவீன கணினி ஆய்வகங்கள் அமைக்க வேண்டும்.

வருகிற ஜனவரி மாதம் 7-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள சங்கத்தின் முதல் மாநாட்டில் கணினி அறிவியல் பட்டதாரிகள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜோதிலட்சுமி மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios