செயற்குழுவின் போது எடப்பாடிக்கு வந்த அதிர்ச்சி செய்தி.! சோகத்தில் அதிமுக

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.ஜி.ரமேஷ் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கே.ஜி.ரமேஷ் கந்திலி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

Former MLA of Tirupattur KG Ramesh died of heart attack kak

மாஜி எம்எல்ஏ மரணம்

திருப்பத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிவர் கே.ஜி.ஆர் என அழைக்கப்படும் கே.ஜி.ரமேஷ், இவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவர் அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இவரது உறவினர் வீட்டில் 40 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றி இருந்தனர். இந்த நிலையில் நேற்று திடீரென கே.ஜி.ரமேஷ்க்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

2026 சட்டமன்ற தேர்தல்.! திமுக- அதிமுக கூட்டணியில் இடம்பெறப்போகும் கட்சிகள் என்ன.?

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி

கே.ஜி.ரமேஷ் மறைவு செய்தி கேட்ட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளரும், திருப்பத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  K.G. ரமேஷ் அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் தொடர்ந்து விசுவாசம் கொண்டிருந்த திரு. ரமேஷ் அவர்கள், பல்வேறு பொறுப்புகளில் கழகப் பணிகளை திறம்பட ஆற்றி உள்ளதோடு, கந்திலி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் சிறந்த முறையில் மக்கள் பணிகளை ஆற்றி உள்ளார்.

எடப்பாடி இரங்கல்

கழகத்தின் தீவிர விசுவாசி அன்புச் சகோதரர்  ரமேஷ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். உறவினர்களுக்கும், கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வானதியும் இல்லை.. நயினாரும் இல்லையா.? அப்போ இவர் தான் பாஜக புதிய தலைவரா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios