2026 சட்டமன்ற தேர்தல்.! திமுக- அதிமுக கூட்டணியில் இடம்பெறப்போகும் கட்சிகள் என்ன.?
2021 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு குறைந்த இடங்களை ஒதுக்கத் திட்டமிடுவதாகத் தெரிகிறது. இது காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளின் நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனால் அதிமுக, பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
அதிமுகவை வீழ்த்திய திமுக
தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அதிகாரத்தை அதிமுகவிடம் இருந்து தட்டி பறித்தது. இந்த வெற்றிக்கு திமுக அமைத்த கூட்டணியே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி இடம்பிடித்திருந்தது. அதிமு கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்திருந்தது.
200 தொகுதியில் போட்டி.? காங்கிரஸ்க்கு செக் வைத்த திமுக.! பல்டி அடிக்க காத்திருக்கும் கதர்
கூட்டணி பிரிவு- அதிமுக தொடரும் தோல்வி
இந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே நேரத்தில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுகவையும் மக்கள் முழுவதுமாக கைவிடவில்லை. 78தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. இதனையடுத்து நடைபெற்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் எந்த வித மாறுதலும் இல்லாமல் தேர்தலை எதிர்கொண்டது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, பாஜக தனி அணியாக தேர்தலை சந்தித்தது. இதனால் அதிமுக மற்றும் பாஜக வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்வியை ஏற்படுத்தியது.
200 தொகுதியில் திமுக போட்டி
திமுக கூட்டணியானது தமிழகம் மற்றும் புதுவையில் 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த வெற்றியால் திமுக புது தெம்புடன் தன்னை எதிர்க்க யாரும் இல்லை, எதிரிகளே இல்லையென்ற தைரியத்தோடு 2026ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள களம் இறங்கியுள்ளது. அந்த வகையில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து திமுக ஏன் உழைக்க வேண்டும் என்ற கேள்வியானது எழுந்துள்ளது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டிய இடத்தில் திமுகவே போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் 200 தொகுதிகளில் திமுக போட்டியிட இலக்கு நிர்ணயித்துள்ளது.
விஜய்- சீமான் கூட்டணி.?
திமுகவின் இந்த முடிவால் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் என்ன முடிவெடுக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை திமுக குறைவான தொகுதிகளை கொடுக்க நினைத்தால் அதிமுக கூட்டணிக்கு காங்கிஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் செல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் பாஜகவை அதிமுக ஏற்றுக்கொள்ளாத நிலையில் மீண்டும் தனி அணியாக போட்டியிட வேண்டிய நிலை உருவாகும். இதனிடையே புதிதாக கட்சி தொடங்கவுள்ள விஜய் தனது அணியில் நாம் தமிழர் கட்சியோடு இணைந்து தேர்தலை சந்திக்கும் நிலை உருவாகும்.
வானதியும் இல்லை.. நயினாரும் இல்லையா.? அப்போ இவர் தான் பாஜக புதிய தலைவரா.?
யூகிக்க முடியாத இடத்தில் பாமக.?
எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் கட்சிகள் இடம்பெறும் எனவும், அதிமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் இணையலாம் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதே போல பாமக தேர்தல் நேரத்தில் கடைசி கட்டத்தில் எந்த அணிக்கு தாவும் என்பது யூகிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர்.