20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை..! பாஜகவினரையும் படிக்க வைக்க வேண்டும் - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 20,000 புத்தகங்களை படித்துள்ளதாக கூறுகிறார், அவர் தன் கட்சி தோழர்களையும் புத்தகங்கள் படிக்க வைக்க வேண்டும் என ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு கேட்டுக்கொண்டுள்ளார்.
சால்வைகளை தவிர்த்த முதல்வர்
மாதம் ஒரு எழுத்தாளர் என்ற நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு எழுதிய ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூலின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, , தான் எழுதிய ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூலை அறிமுகம் செய்து வாசகர்களுக்கு வழங்கினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் சால்வைகளை தவிர்த்து புத்தகங்களை வழங்க வேண்டும் என தொண்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். இதனால் கிடைத்த லட்சக்கணக்கான புத்தங்களை தமிழகத்தில் உள்ள துணை நூலகங்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..! டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்ட தமிழக ஆளுநர்
பாஜகவினர் புத்தகம் படிக்க வேண்டும்
தொடர்ந்து பேசிய அவர் புதுக்கோட்டைக்கு வருகை புரிந்த தமிழகமுதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, ‘அறியாதப்படாத கிருஸ்துவம்’என்ற நூலை வழங்கினார். இதற்க்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்தனர். மேலும் இந்து முன்னனி அமைப்பினர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுக்கு ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலை வழங்கியதாக தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாணவர்கள் மத்தியில் பேசும் போது தான் 20,000 புத்தகங்களை படித்துள்ளதாக கூறினார். அதேபோல் தன் கட்சியின் தொண்டர்களையும் அவர் படிக்க வைக்க வேண்டும். ஏனென்றால் புத்தகங்களை படித்தால் பாசிச கொள்கையை போக்கலாம்” என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்