கருணாநிதியை எச்சரித்தேன் கேட்கவில்லை; அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்; சுப்ரமணியன் சாமி

திமுக தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி வருகிறது அடுத்த சட்ட சபையில் ஒரு மாற்றுக் கட்சியாக பாஜக வரும் என மதுரையில் நடைபெற்ற விழாவில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Subramanian Samy said that BJP will come as an alternative party in Tamil Nadu

நாட்டில் மிகப்பெரிய மாற்றம்

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்பிரமணியன் சுவாமியின் 83 வது பிறந்தநாள் விழா மதுரையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள் வாழ்த்தி பேசினர். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது. நாட்டின் கலாச்சாரத்தை வெள்ளைக்காரர்கள் எரித்ததால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி சென்றோம்.  தற்போது அதிலிருந்து மீண்டு சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறோம். ராணுவ உற்பத்தி அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் நாம் நம்பர் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்தோம்.  அதனால் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்து நம்மை பிரித்தனர். ஒரு நாடு சிறந்து விளங்க பொருளாதாரக் கொள்கை ராணுவக் கொள்கை பலமாக இருக்க வேண்டும் என்றார்.

Subramanian Samy said that BJP will come as an alternative party in Tamil Nadu

ராமர் என்றால் யார்..?

கருணாநிதி என்னிடம் பேசும் போது திராவிட என்று கூறினார்,  அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டு அது சமஸ்கிருதம் என்று கூறினேன். உங்களின் பெயரில் 40% சமஸ்கிருதம் உள்ளது என்று அவரிடம் கூறி விளக்க நூலை வைத்து விவரித்தேன்.  அதேபோல் உதயசூரியன் என்ற உங்கள் கட்சியின் பெயரும் சமஸ்கிருதம் தான் என்றும் கூறினேன். சங்கராச்சாரியார், ஆதி சங்கராச்சாரியார் சமஸ்கிருதத்தை எடுத்துச் சென்று அனைவரையும் தோற்கடித்தார். ஆங்கிலேயர்கள் ஆரியன், திராவிடன் என்ற பிரிவினையை உண்டாக்கினார்கள். திராவிடா என்பதில் திராவிட என்பது மூன்று கடலும் சங்கமிக்கும் இடம் என்று பொருள் இது திராவிடமாக மாறியது. நானும் கருணாநிதியும் பலமுறை சண்டையிட்டுக் கொள்வோம் ஆனால் எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது. ராம் சேது திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்த போது நான் அவரை எதிர்த்தேன் அதற்கு யார் ராமர் என்று கருணாநிதி என்னிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மறுநாள் அவர் உடல் நலம் குன்றி சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நான் அவருக்கு "கெட் வெல் சூன்" ராமர் யார் என்று தெரிகிறதா என்று கூறினேன்.

Subramanian Samy said that BJP will come as an alternative party in Tamil Nadu

சட்டசபையில் மாற்று கட்சியாக பாஜக

திமுக தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி வருகிறது அடுத்த சட்ட சபையில் ஒரு மாற்றுக் கட்சியாக பாஜக வரும். கம்பராமாயணத்தை எழுதிய வால்மிகியும் ஒரு செட்டியூல் காஸ்ட் தான். ஆனால் அவரின் தாய் தந்தை பிராமணராக இருந்தவர்கள். யாராவது தகராறு செய்ய தயாராக இருந்தால் நானும் தகராறு செய்ய தயாராக இருக்கிறேன். விடுதலை புலிகளுக்கு தமிழ்நாட்டில் சிகிச்சையளிக்க கூடாது அப்படி அளித்தால் ஆட்சிக்கலைப்படும் என்றேன். ஆட்சியை கலைத்தால் ரத்த ஆறு ஓடும் என கருணாநிதி என்னிடம் கூறினார். 1991-ம் ஆண்டு ஜனவரி - 31 ல் ஆட்சி கலைந்தது. ஆனா ஒரு சைக்கிள் கூட எரியவில்லை. அடுத்த 2 மாத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக இரண்டு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.கருணாநிதி தனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தவர்  தமிழில் பெயரை வைக்கவில்லையே எங்கிருந்து வைத்தார். ரஷ்யன் பெயரை வைத்துள்ளார்.

Subramanian Samy said that BJP will come as an alternative party in Tamil Nadu

பெரியார் இருந்திருந்தால் திமுக இருக்காது

தமிழ் தாய்மொழி. இந்தி கற்றுக் கொண்டால் என்ன தவறு. கட்டாயம் என்று நான் கூறவில்லை இந்திய கற்றுக் கொள்ள விரும்புவர்களை  ஏன் தடை போடுகிறீர்கள் என்று தான் கேள்வி எழுப்புகிறேன். பெரியார், பெரியார் என்று கூறுபவர்கள் இன்று பெரியார் இருந்திருந்தால் இன்று திமுக இருந்திருக்காது. பெரியார் என்று அழைக்கப்படும் ராமசாமி நாயக்கர் ஈரோட்டில் அவருடைய அப்பா கோயில் கட்டி கொடுத்து கோயிலை தனது மகன் ராமசாமி நாயக்கர் பராமரிப்பார் என்று உயில் எழுதி வைத்தார். அதன்படி  கோயிலை முறையாக பராமரித்திற்காக 25 ஆண்டுகள் தொடர்ந்து முதல் பரிசை பெற்றுள்ளார். இது  கி.வீரமணிக்கு தெரியுமா? அவர் எங்கே இருக்கிறார் ஓடிப் போய்விட்டார் என சுப்பிரமணியன் சாமி பேசினார்.

இதையும் படியுங்கள்

திமுக துணைப் பொதுச் செயலாளராகிறார் எம்.பி. கனிமொழி? விரைவில் வெளியாகபோகும் அறிவிப்பு?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios