ஆர்.எஸ்.எஸ் பேரணியில் பங்கேற்றதால் தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டார். தற்போது ஆர்எஸ்எஸ் நிகழ்வுகளில் அதிமுக மூத்த தலைவர் எஸ் பி வேலுமணி பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ADMK BJP alliance : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். இதற்காக நடிகர் விஜய்யை தங்கள் அணியில் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் விஜய்யின் அதீத நிபந்தனையால் கூட்டணி அமையாத சூழல் உருவானது.
இதனையடுத்து கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தீடிரென பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டது. அதிமுக தலைவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தது முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதனையடுத்து இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லையென எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தளவாய் சுந்தரத்தை நீக்கிய எஸ்.பி.வேலுமணி
மேலும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் 2024 அக்டோபர் 6 அன்று கன்னியாகுமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணியை கொடியசைத்து அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். இது அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக இருப்பதாகக் கருதி அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அடுத்ததாக பாஜக நடத்திய இரு மொழி கொள்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டதற்காக திருவள்ளூர் மாவட்ட செயலாளரையும் நீக்கியும் அறிவித்தார்.

ஆர் எஸ் எஸ் நிகழ்வில் எஸ்.பி.வேலுமணி
ஆனால் காலப்போக்கில் மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் கலந்து கொண்டனர்.அப்போது அறிஞர் அண்ணா மற்றும் பெரியாரை விமர்சித்து வெளியான வீடியோவையும் பார்த்து எந்தவித கருத்தும் சொல்லாமல் அமைதி காத்திருந்தனர். இந்த நிலையில் இன்று கோவை பேரூர் ஆதீனத்தில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா RSS தலைவர் மோகன் பகவத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றுள்ளார். ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா மற்றும் 24 வது பேரூர் ஆதினம் சாந்திலிங்க ராமசாமி அடிகளார் நுற்றாண்டு விழாவையொட்டி பேரூர் அதீன மடத்தில் பாரம்பரிய சிவ வேள்வி பூஜை நடைபெற்று வருகிறது.
நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வாக ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சிறப்புரையாற்றினார். விழாவில் பேராதீனம் தவத்தில் சாந்தலிங்கர் மருதாசல அடிகளார், கௌமார மடாலய குமரகுருபர சுவாமிகள், பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், செல்லதுரை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர்.

எஸ் பி வேலுமணி நீக்கப்படுவாரா.?
முன்னதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு வெள்ளிமுருகன் சிலையை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முருகன் சிலை வழங்கி வரவேற்றார். இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்து கொண்டதற்காக தளவாய் சுந்தரம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது ஆர்எஸ்எஸ் தலைவர் பங்கேற்க விழாவில் அதிமுக மூத்த நிர்வாகி எஸ்.பி. வேலுமணி பங்கேற்றுள்ளார். எனவே எஸ்.பி.வேலுமணியை கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
