OPS க்கு வந்த டெல்லி தொலைபேசி அழைப்பு.? OPRயிடம் கூறிய ரகசியம்..? அதிமுக Ex நிர்வாகி கூறிய பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து டெல்லி சென்ற இபிஎஸ், மோடி மற்றும் அமித்ஷாவை தனியாக சந்திக்க திட்டமிட்ட நிலையில், அனுமதி கிடைக்காததால் இபிஎஸ் உடனடியாக டெல்லியில் இருந்து திரும்பி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவும்- மோதலும்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் இருந்து பல பிளவுகள் உருவானது. இதில் முக்கியமானது சசிகலா, தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கிவைத்ததாகும், இதனையடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியோடு போட்டியிட்ட அதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது சசிகலா அணியை சேர்த்துக்கொள்ள வேண்டும் அப்போது தான் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற முடியும் என கூறப்பட்டது. இதற்க்காக டெல்லியில் இருந்து வந்த அமித்ஷா ஓபிஎஸ், இபிஎஸ் இருவரிடமும் ஆலோசனை நடத்தினார். இதற்க்கு ஓபிஎஸ் சம்மதம் தெரிவித்த நிலையில் இபிஎஸ் மறுத்தார். இதன் காரணமாக சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை அதிமுக இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இபிஎஸ் மீது பாஜக தலைமை அதிருப்தி கொண்டிருந்தது. இதனையடுத்து அதிமுக மீண்டும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுந்து கொண்டே இருந்தது.
ஓபிஎஸ்யின் தேனி மாவட்ட ஆதரவாளர் சையது கான்...! திடீரென டிடிவியோடு சந்திப்பு..? என்ன காரணம் தெரியுமா?
சென்னை திரும்பிய இபிஎஸ்
அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் காரணமாக வாக்குகள் சிதறி எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பாக மாறி வருகிறது. இந்தநிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது மேலும் அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதிவியேற்பு நிகழ்ச்சிக்காக டெல்லி சென்ற இபிஎஸ், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டிருந்தார். இபிஎஸ் தரப்பு ஒற்றை தலைமை என்ற நிலைப்பாட்டில் மாறுபட்ட கருத்தே இல்லையென கூறியது. இதன் காரணமாக அதிருப்தி அடைந்த பாஜக மேலிடம் மோடி மற்றும் அமித்ஷா சந்திப்பிற்கு ரெட் சிக்னல் காட்டியது. ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா ஆகிய 3 பேரும் ஒன்றினைந்தால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெறும் நிலை உருவாகும் என பாஜக நினைப்பதாக டெல்லி தகவல் தெரிவிக்கின்றன. எனவே அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற முடிவை பாஜக ஏற்றுக்கொள்வில்லையென கூறப்படுகிறது.
ஓபிஎஸ்க்கு டெல்லி தொலைபேசி அழைப்பு..?
இந்தநிலையில் அதிமுக முன்னாள் நிர்வாகியான அஸ்பயர் சுவாமிநாதன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், EPS-ஐ சந்திக்க மறுத்த மோடி மற்றும் அமித் ஷா. இன்று காலையில் ஓபிஎஸ்-க்கு வந்த டெல்லி தொலைபேசி அழைப்பு ... OPR மூலமாக ரகசிய தகவல் சொல்லி அனுப்பிய அந்த முக்கிய புள்ளி... மாறுகிறதா அதிமுகவில் அரசியல் களம்? என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு இபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஓபிஎஸ் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பாஜக மேலிட நிர்வாகிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அதிமுக கட்சி விவகாரங்கள் தொடர்பாக ஆறுதல் கூறி உறுதி அளித்தாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
புதிதாக 14 பேரை அதிமுக மாவட்ட செயலாளர்களாக நியமித்து அதிரடி காட்டிய ஓபிஎஸ்..! அதிர்ச்சியில் இபிஎஸ்