புதிதாக 14 பேரை அதிமுக மாவட்ட செயலாளர்களாக நியமித்து அதிரடி காட்டிய ஓபிஎஸ்..! அதிர்ச்சியில் இபிஎஸ்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், 14 மாவடங்களுக்கு மாவட்ட செயலாளர்களை நியமித்து ஓபிஎஸ் அதிரடிகாட்டியுள்ளார்.
இபிஎஸ்- ஓபிஎஸ் மோதல்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் என அதிமுக பிளவு பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இதற்க்கு போட்டியாக ஓ.பன்னீர் வெளியிட்ட அறிவிப்பில் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட அதிமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை நீக்கி உத்தரவிட்டார். இரு தரப்பும் மாறி, மாறி அதிமுகவில் இருந்து நிர்வாகிகளை நீக்கி அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை நியமித்து ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், கழகப் பொருளாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் முக்கிய அறிவிப்பு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
1.திரு. V.N.P. வெங்கட்ராமன், (கழக வர்த்தக அணிப் பிரிவுச் செயலாளர்) சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்.
(ஆலந்தூர், சோளிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிகள்)
2. திரு. ஆர். தர்மர், இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர். (முதுகளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
3. திரு. R.கோபாலகிருஷ்ணன், (கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர்) மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் (மதுரை மத்திய, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிகள்)
4. திரு. கோவை K. செல்வராஜ், (கழக செய்தித் தொடர்பாளர்) கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர். (கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் சட்டமன்றத்தொகுதிகள்)
5. திரு..கொளத்தூர் Dகிருஷ்ணமூர்த்தி, வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர். (கொளத்தூர், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிகள்) (வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.)
6. திரு. M.M. பாபு, தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர். (சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிகள்)
எடப்பாடி பழனிச்சாமி பதவியே செல்லாது.. மகனை காக்க மக்களவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் எழுதிய கடிதம்!
7. திரு. ரெட்சன் C.அம்பிகாபதி, அவர்கள், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர். (அண்ணா நகர், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிகள்)
8. திரு. J.K. ரமேஷ், வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் (பெரம்பூர், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிகள்) (பெரம்பூர் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.)
9. திரு. M.R.ராஜ்மோகன்,(மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்) திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் (மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி சட்டமன்றத் தொகுதிகள்) (திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
10. திரு. T.மகிழன்பன்,வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் (எழும்பூர், துறைமுகம் சட்டமன்றத் தொகுதிகள்) (எழும்பூர் வடக்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்)
11 திரு.K.R. அசோகன், சிவங்கை மாவட்டக் கழகச் செயலாளர்
12 திரு. R.V.ரஞ்சித் குமார், காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர். (ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்,உத்திரமேரூர் தொகுதிகள்)
13. திரு.N.சிவலிங்கமுத்து, திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்.
14. திரு.V.K.கணபதி, தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர். (ஆலங்குளம், தென்காசி சட்டமன்றத் தொகுதிகள்)
கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்சுப்பட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
பள்ளிக்கு மாணவர்கள் மொபைல் போன் கொண்டு வரலாமா..??? அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு