கல்வி திருட முடியா சொத்து... பெண் கற்க தடை இருக்கக் கூடாது: கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் உரை
பெண்களின் கல்வி எந்தக் காரணத்தை முன்னிட்டும் தடைபடக் கூடாது என்பதற்காக பார்த்துப் பார்த்து திட்டங்களைத் தீட்டிவருவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் சொந்தத் தொகுதியான சென்னை கொளத்தூரில் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதன்படி, கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.
விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "எத்தனை பணிகள் இருந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு வந்தால் புது உற்சாகம் பிறக்கிறது. தமிழ்நாட்டிற்கே முதல்வராக இருந்தாலும் கொளத்தூர் மக்களுக்கு நான் சட்டமன்ற உறுப்பினர்தான். கொளத்தூர் மக்கள் வாக்களித்து எம்எல்ஏ ஆனதால்தான் முதல்வர் ஆகியிருக்கிறேன்" என்று தெரிவித்தார். கொளத்தூர் மக்கள் உரிமையோடு கேட்பதை செய்து கொடுக்கவேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
எந்தக் காரணத்தைக் கொண்டு பெண் கல்வி தடைபடக் கூடாது என்றும் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவசப் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் போன்ற திட்டங்களைப் பார்த்துப் பார்த்து செயல்படுத்தி வருகிறாகத் தெரிவித்தார். மேலும், அண்மையில், தோழி பெண்கள் விடுதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது பற்றியும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.
விழாவை ஏற்பாடு செய்திருந்த அமைச்சர் சேகர் பாபுவை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின், சேகர் பாபுவின் உழைப்பைப் பார்த்து அவரை சேகர் பாபு என்பதற்குப் பதில் செயல் பாபு என்றே அழைப்பதாகவும் பாராட்டினார். கபாலீஸ்ரர் கல்லூரியில் மாணவர் சேர்க்க 600 க்கு மேல் உயர்ந்திருக்கிறது என்றும் இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றும் குறிப்பிட்ட முதல்வர் இது சேகர் பாபுவுக்குக் கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டார்.
மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை மன்னிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
முன்னதாக, கொளத்தூர் அகரம் மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.6.32 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர், பள்ளி மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களையும் முதல்வர் வழங்கினார்.
ஜவஹர் நகரில் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, மாவு அரவை இயந்திரங்கள், இஸ்திரி பெட்டிகள் போன்ற நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் பயனாளிகளுக்கு அளித்து வாழ்த்து கூறினார்.
சொந்தமாக ரயில் வைத்திருக்கும் ஒரே விவசாயி! இவர் ரயில் வாங்கியது எப்படி தெரியுமா?