கரூரில் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் அதிரடி சோதனை

கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மணல் குவாரிகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று மீண்டும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

enforcement officers raid at sand quarry in karur district vel

கரூர் மாவட்டம்,  வாங்கல் அருகே மல்லம்பாளையம்,  நன்னியூர் என இரண்டு இடங்களில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் 12ம் தேதி கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இரண்டு மணல் குவாரியின் அலுவலகம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் பகுதியில் உள்ள மணல் கிடங்கு பகுதில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது.

அந்த அலுவலகத்தில் கரூர் மாவட்ட இரண்டு குவாரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் 1 மணல் குவாரி என மூன்று குவாரிகளின் ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வரை மணல் குவாரி இயங்காமல் இருந்து வருகிறது.

கைக்குழந்தைக்கு தாய் பால் ஊட்டிக்கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து பலி; ஈரோட்டில் பரபரப்பு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில் தற்போது  நன்னியூர் பகுதியில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போலி ஆவணங்கள் வைத்து மணல் அள்ளப்பட்டு அரசுக்கு இழப்பீடு செய்யப்பட்டதாக கூறி விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக 2 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படை போலீஸ் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios