மது பழக்கம் இல்லாதவருக்கு அபராதம் விதித்த விவகாரம்... டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்!!!!
மது பழக்கம் இல்லாதவருக்கு அபராதம் விதித்த விவகாரத்தில் இயந்திரத்தில் தவறு என்றால் நிச்சம் விசாரணை நடத்தப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

மது பழக்கம் இல்லாதவருக்கு அபராதம் விதித்த விவகாரத்தில் இயந்திரத்தில் தவறு என்றால் நிச்சம் விசாரணை நடத்தப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லை ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் விசாரணைக்கு வந்த கைதிகளின் பற்களை பிடுங்கியதாக வெளியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இரவு ரோந்து பணியில் பணியாற்றும் காவலர்களுக்கு டார்கெட் எதுவும் கொடுக்கப்படவில்லை.குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்,போக்குவரத்து விதிமீறல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே காவல்துறையின் இலக்கு.
இதையும் படிங்க: விவசாயிகளின் கூலிக்கு கூட தேறவில்லை; தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை
அதில் நவீன இயந்திரம் மூலம் தான் மது அருந்துகிறார்களா என்பதை கண்காணிக்கிறோம். 6 மணி நேரத்திற்கு முன்பு அல்லது நேற்றைய தினம் மது அருந்தி இருந்தால் கூட இயந்திரம் மூலம் கண்டுபிடித்து விடலாம். 3 மாதத்துக்கு முன் வாங்கிய இயந்திரம் தான் காவல்துறையினர் பயன்படுத்தி வருகிறார்கள். இயந்திரம் குறித்த புகார் மீது விசாரணை நடத்தப்படும். இயந்திரத்தில் தவறு என்றால் நிச்சயம் விசாரிப்போம். விசாரணை கைதிகளிடம் காவல்துறையினர் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி வருகிறோம்.
இதையும் படிங்க: 5 முறைக்கு மேல் அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 50% சலுகை... அமைச்சர் சிவசங்கர் சூப்பர் தகவல்!!
காவல் நிலையத்தில் சிறையில் இருக்கும் கைதிகளின் நிலவரத்தை தினமும் இரவு கேட்டு வருகிறோம். கடந்த 5 மதங்களாக தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணங்கள் இல்லை. மீனவ குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு கடலோர காவல் படை, மாலுமி போன்ற பணிகளில் சேர்வதற்கான முதற்கட்ட பயிற்சி முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட பயிற்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 100 இளைஞர்களை கடற்படையில் சேர்க்க வேண்டும் என்ற இலக்கோடு பயிற்சி வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.