Asianet News TamilAsianet News Tamil

5 முறைக்கு மேல் அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 50% சலுகை... அமைச்சர் சிவசங்கர் சூப்பர் தகவல்!!

SETC பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

50 percentage discount for passengers who travel by govt bus more than 5 times says minister sivashankar
Author
First Published Mar 29, 2023, 8:47 PM IST

SETC பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதையும் படிங்க: கோவில்பட்டியில் ஆபத்தை உணராமல் அரசு பேருந்தில் சாகச பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

இதுக்குறித்து பேசிய அவர், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு என பிரத்யோக இருக்கைகள் போதுமான அளவில் இல்லாததால் பெண்கள் தனியாக பயணம் செய்ய தயங்குகின்றனர். பெண்களுக்கு பிரத்யோகமாக அதிக இருக்கையில் வழங்கப்பட்டால் அவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பயமின்றி நம்பிக்கையுடன் பயணிக்க விரும்புவார்கள்.

இதையும் படிங்க: விவசாயிகளின் கூலிக்கு கூட தேறவில்லை; தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு என தனியாக நான்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். பயண நேரத்திற்கு 24 மணி நேரம் முன்பு வரை இணையதளத்தில் முன்பதிவில் பெண் பயணிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருக்கும். SETC பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, 6 ஆவது முறை பயணம் முதல், 50% கட்டணச் சலுகை. இந்த சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios