நெருங்கும் தீபாவளி.. குறைந்த விலையில் பட்டாசு.. தமிழகத்தில் புதிய மோசடி - எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீசார்!
Online Crackers Scam : உலக அளவில் எல்லாம் டிஜிட்டல் மையமாகிவிட்ட இந்த உலகத்தில், நம் விரல் நுனியில் தான் இந்த உலகமே அடங்கியுள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. ஆனால் அதே நேரத்தில் இணைய வழியில் மக்களை இன்றளவும் பலர் ஏமாற்றிக் கொண்டுதான் வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் மூலம் செல்போன் போன்ற பிற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பண்டிகை காலங்களில், அதிலும் குறிப்பாக தீபாவளி போன்ற பெரிய பண்டிகை காலங்களில் மக்கள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் பட்டாசுகளை வாங்க பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முன்பெல்லாம் தீபாவளி நாளுக்கு முந்தின நாள், உறவிர்கள் மற்றும் நண்பர்களோடு இணைந்து சந்தைக்கு சென்று தீபாவளிக்கான வெடிகளை வாங்கி மகிழ்ந்த காலம்போய், இப்பொது எல்லாமே ஆன்லைன் ஆர்டர் என்று ஆகிவிட்டது. இதனை பயன்படுத்திக் கொண்டு பல நிறுவனங்கள் இலவச டோர் டெலிவரி மற்றும் தள்ளுபடிகளோடும் தங்களது பட்டாசுகளை மிகக்குறைந்த விலையில் விற்று வருகின்றனர்.
காருக்குள் ஏன் ஹெல்மட் போடல? குழம்பிப்போன கார் ஓனர் - 1000 ரூபாய் அபராதம் போட்டு சென்ற போலீஸ்!
ஆனால் அதே நேரம் இணைய வழியில் மிக மிக குறைந்த விலைக்கு பட்டாசுகளை தருவதாக கூறி ஆன்லைன் மூலம் மக்களை ஏமாற்றும் கும்பலும் வளம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது தீபாவளி திருநாள் நெருங்கி வரும் இந்த நேரத்தில் தமிழகத்தின் தலைநகரான சென்னை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைகள் போலியாக நடந்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
மிக மிக குறைந்த விலையில் பட்டாசுகளை தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை அனுப்பி, அவர்கள் அனுப்புகின்ற லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் பொதுமக்களிடமிருந்து பணம் பறிக்கப்படுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர் ஆகவே நம்பகத்தன்மை இல்லாத எந்த விதமான லிக்குகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D