Asianet News TamilAsianet News Tamil

காருக்குள் ஏன் ஹெல்மட் போடல? குழம்பிப்போன கார் ஓனர் - 1000 ரூபாய் அபராதம் போட்டு சென்ற போலீஸ்!

சங்கரன்கோவில் தாலூக காவல்துறையினர் காருக்கு தலைக்கவசம் அணியவில்லை என ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த செய்தி தற்போது காட்டுத்தீ போல பரவி வருகின்றது.

Fine for car owner for not using helmet inside car strange case in sankarankovil ans
Author
First Published Nov 5, 2023, 9:36 AM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே  சேர்ந்தமரம் வேலப்பநாடாரூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் சுரேஷ் கண்ணன். இவருக்கு சொந்தமான சொகுசு காருக்கு சில நாட்களுக்கு முன்பு தலைக்கவசம் அணியவில்லை என, ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டதாக அவருடைய செல்போன் எண்ணிற்கு குறுஞ் செய்தி வந்துள்ளது. 

என்னது காருக்குள் ஹெல்மெட் அணியாததற்கு 1000 ரூபாய் அபாரதமா என்று அதனை பார்த்து அதிர்ச்சியடைந்து மிகுந்த மனை உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் அவர். இது தொடர்பாக காரின் உரிமையாளரை தொடர்பு கேட்ட போது, என்னுடைய கார் சங்கரன்கோவில் பகுதிக்கு வரவே இல்லை, ஆனால் சங்கரன்கோவில் தாலூக காவல்துறையினர் எனக்கு அபராதம் விதித்தது வேதனையாக உள்ளதாக தெரிவித்தார்.

படிப்படியாக குறைய தொடங்கிய வெங்காயத்தின் விலை.! கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

சங்கரன்கோவில் பகுதியில் வாகன தனிக்கையின் போது, உரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் இல்லாமல், காவலர்கள் அவர்களின் வேலையை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்யாமல் சாலையில் செல்லும் வாகனங்களின் எண்களை எழுதி வைத்து. பின்னர் அபராதம் விதிப்பதனால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Challan

மேலும் அதிகாரிகள், காவலர்களுக்கு நாள் ஒன்றுக்கு இத்தனை வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என காவல்துறையினரை நிர்பந்தம் செய்வதானலும் இது போன்ற தவறுகள் நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது. எனவே மாவட்ட எஸ்பி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காவலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகவும் இருந்து வருகின்றது.

பாலியல் சீண்டல் செய்த திமுகவினரைக் கைது செய்வதில் காட்டாத வேகத்தை, பாஜகவினர் மீது காட்டுவதா.? சீறும் அண்ணாமலை

சங்கரன்கோவில் பகுதியில் சாலையில் செல்லாத வாகனங்களுக்கு காவல்துறையினர் தொடர்ந்து அபராதம் விதித்து வரும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. எனவே மெத்தனமாகவும், அலட்ச்சியத்துடனும் செயல்பட்டு வரும் சங்கரன்கோவில் உட்கோட்ட காவல்துறையினர், புதிதாக பொருப்பேற்றுள்ள மாவட்ட எஸ்பி. சுரேஸ்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios