பள்ளி மாணவர்களை தாக்கிய வழக்கு! நிபந்தனை ஜாமீனில் வந்த நடிகைக்கு கையில் சூடம் ஏத்தி ஆரத்தி எடுத்த பாஜக பெண்!

 நடிகையும் பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் மீது மாணவர்களை தாக்கியது, ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாங்காடு போலீசார் நேற்று காலை கைது செய்தனர். 

ActressRanjana Nachiyar who came on conditional bail... BJP woman executive who took aarti tvk

மாநகர பேருந்து படிக்கெட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட அவருக்கு பாஜகவினர் கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்தனர்.

சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற மாநகர பேருந்து படிக்கெட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்தும், ஒருமையில் திட்டியும் கையை பிடித்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டார்.  இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இந்த வீடியோவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். 

இதையும் படிங்க;- அவனுங்கள செருப்பால அடிக்கணும்! நாய் என்று சொல்லி பள்ளி மாணவர்களை தாக்கிய நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது.!

ActressRanjana Nachiyar who came on conditional bail... BJP woman executive who took aarti tvk

இந்த சம்பவம் தொடர்பாக நடிகையும் பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் மீது மாணவர்களை தாக்கியது, ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாங்காடு போலீசார் நேற்று காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமின் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ActressRanjana Nachiyar who came on conditional bail... BJP woman executive who took aarti tvk

இதனையடுத்து தனது கட்சி நிர்வாகிகளுடன் போரூர் அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு ரஞ்சனா நாச்சியார் காரில் வந்து இறங்கினார். அப்போது அவரது வீட்டின் முன்பு கூடி இருந்த பாஜக பெண் தொண்டர்கள் தட்டில் கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். அதில் ஆரத்தி எடுத்த பெண்கள் திமுக, அதிமுக கண்கள் ஒழிந்து போனது என கூறி ஆரத்தி எடுத்தனர். அங்கு இருந்த பாஜக பெண் நிர்வாகி ஒருவர் அதற்கு மேலாக கடவுளுக்கு சூடம் காட்டுவது போல் தனது கையில் கற்பூரத்தை ஏற்றி நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு திருஷ்டி கழித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios