Payya Gounder : கோவை மாவட்ட திமுக மாஜி மாவட்ட செயலாளர் திடீர் தற்கொலை.? காரணம் என்ன.? போலீசார் விசாரணை
கோவை முன்னாள் மாவட்ட செயலாளர் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பையா கவுண்டர் திடீர் தற்கொலை
கோவை மாவட்டத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்து வருவபவர் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன். இவர் கோவை மேற்கு மாவட்ட செயலாளராகும் இருந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கட்சி பணியில் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். இந்தநிலையில் இன்று காலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
போலீசார் விசாரணை
முதலில் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், வீட்டில் தற்கொலை செய்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக காளப்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. ரியஸ் எஸ்டேட் அதிபரான பையா (எ) கிருஷ்ணன் தற்கொலை குறித்து கோவில்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
ஷாக்கிங் நியூஸ்.. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு.. என்ன காரணம் தெரியுமா?