Asianet News TamilAsianet News Tamil

கோவை மாநகராட்சி.. 780 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் - தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி!

Minister Udhayanidhi Stalin : கோவை மாநகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு 780 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் உள்ளிட்ட பல திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். 

Coimbatore Corporation development schemes worth 780 crores launched by Minister Udhayanidhi ans
Author
First Published Feb 11, 2024, 9:29 PM IST | Last Updated Feb 11, 2024, 9:29 PM IST

சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துச்சாமி மற்றும் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டங்களை துவக்கி வைத்து பேசினார். 

அப்போது கோவை மாநகரில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு 780 கோடி மதிப்பீட்டில் பில்லூர் 3 வது திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதில் மகிழ்ச்சி என அவர் தெரிவித்தார். மாதம் ஒரு முறை கோவை வந்து கொண்டு இருக்கின்றேன், என தெரிவித்த அவர், இது கலைஞர் வாழ்ந்த ஊர் என தெரிவித்தார்.

1 ரூபாய் வரி கொடுத்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பி தருகிறது : உதயநிதி ஸ்டாலின்

ஈரோட்டில் 318 கோடி மதிப்பீட்டில் மூன்று நாட்களுக்கு முன்பு திட்டங்களை துவங்கி வைத்தேன் என தெரிவித்த அவர், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதாகவும், முதல்வரும் அவற்றையே பயன்படுத்துகின்றார் என தெரிவித்தார். பரிசு பொருட்கள் கூட  மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என சொல்லி இருக்கின்றேன் என கூறிய அவர்,
பெரியாரும், அண்ணாவும் சந்தித்து கொண்ட திருப்பூருக்கு போய் விட்டு, கலைஞர் வாழ்ந்த கோவைக்கு வந்து இருக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

கோவை மாநகர் முழுவதும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தோம் எனவும், இனி 2 நாட்களுக்கு ஒரு முறை கோவை மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கொண்டு செல்வதே இலக்காக செயல்படுகின்றோம் என தெரிவித்த அவர்.

தமிழகம் முழுவதும் தண்ணீர் கிடைக்க விதையை போட்டவர் கலைஞர் எனவும் தெரிவித்தார். தமிழகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது, நகரங்களை நோக்கி வருபவர்கள் அதகமாகி வருகின்றனர் என தெரிவித்த அவர், நகரங்கள் வேகமாக வளரும் போது அதற்கு ஏற்ப வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும், 2035ல் எவ்வளவு மக்கள் தொகை, 2050ல் எவ்வளவு மக்கள் தொகை என கணக்கில்  கொண்டு திட்டல்களை வகுக்க வேண்டும் எனவும் தெரிவத்தார்.

கோவையில் நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் கிடைக்கும் எனவும், கோவை மக்களின் தாகத்தை போக்கவும், சீராக இயங்கவும் வழிவகை செய்கின்றது எனவும் தெரிவித்தார். தமிழகம் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சீரான வளர்ச்சி அடைந்து இருக்கின்றது எனவும், அனைத்து நகரங்களும் வளர்ச்சியை பெற்று இருக்கின்றன எனவும் தெரிவித்தார்.

பிற மாநிலங்களுடன் ஓப்பிட்டால் வித்தியாசம் தெரியும் எனவும், இது மாடர்ன் அரசாக கோவை இருக்கின்றது, இந்தியாவின் நம்பர் 1 முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் செயல்படுத்தும் ஓவ்வொரு திட்டமும் இந்தியாவை வழிநடத்துகின்றது என தெரிவித்த அவர், இன்று 1419 கோடி கோடியில் பல்வேறு பணிகளை துவங்கி இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

கடந்த 5 வருடத்தில் 6 லட்சம் கோடி வரியாக ஒன்றிய அரசுக்கு கொடுத்து இருக்கின்றோம் எனவும், ஆனால் அவர்கள், 1.58 லட்சம் கோடி மட்டுமே நமக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும்,ஒ ரு ரூபாய் கொடுத்தால் 29 காசுமட்டுமே திருப்பி கொடுக்கபடுகின்றது எனவும், இதை உணர்ந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அடுத்த இரு மாதம் மிக முக்கியமான  காலம் எனவும், இதற்கு மேல் சொல்ல விரும்ப வில்லை எனக்கூறிய அவர், சென்ற முறை சிறு சிறு தவறுகள் நடந்து இருந்தாலும் ,  அதை சரி செய்ய வேண்டும் எனவும்,
மகளிர் குழுவினர் முதல்வரின் முகமாக இருந்து மக்களிடம் திட்டங்களை  கொண்டு செல்ல வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

20 மாவட்டங்களுக்கு விசிட்.. திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios