CM Vijay Convoy: தமிழக முதல்வர் விஜய்யின் கான்வாய் முன்பு பாயந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பம குறித்து முழுமையாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட நடிகர் விஜய்யின் தவெக அமோக வெற்றி பெற்று திமுக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைத்துள்ளது. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். விஜய் தினமும் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சுமார் 17 கிமீ தொலைவில் உள்ள தலைமை செயலகத்துக்கு காரில் வந்து செல்கிறார். அவர் வரும்போது மக்களுக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனை கவனத்தில் கொண்ட முதலமைச்சர் விஜய் தினமும் கோட்டையிலிருந்து வீட்டிற்குப் பயணிக்கும் போது பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். "எனது பயணத்திற்காகச் சாமானிய மக்கள் ஒரு நிமிடம் கூட சாலையில் காத்திருக்கக் கூடாது" என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். இதன் காரணமாக, சென்னை போக்குவரத்து காவல்துறை 'டியூன் லைன்' (Tune Line) என்ற புதிய பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்தியது.

மேலும் படிக்க: செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/fraud-complaint-case-against-senthil-balaji-enforcement-directorate-writes-to-tamil-nadu-government-0s0w74g

விஐபி கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி

இதன்படி முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு (Convoy) சாலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே செல்லும். சாலையின் மறுபுறம் பொதுமக்களின் வாகனங்கள் வழக்கம்போல் எந்தத் தடையுமின்றி அனுமதிக்கப்படும். முதல்வர் விஜய் தினமும் தலைமைச் செயலகம் வரும்போதும், திரும்பும்போதும் காரின் கண்ணாடியை இறக்கி, பொதுமக்களையும் தொண்டர்களையும் பார்த்து கையசைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன்மூலம் விஐபி-க்களுக்காக ஒட்டுமொத்தப் போக்குவரத்தையும் முடக்கும் பழைய கலாச்சாரத்திற்கு இதில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மாலை தனது அரசுப் பணிகளை முடித்துவிட்டு, முதல்வர் விஜய் கோட்டையிலிருந்து ஈசிஆர் (ECR) சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு காரில் புறப்பட்டார். புதிய போக்குவரத்து விதிகளின்படி அவரது கார் அணிவகுப்பு சென்று கொண்டிருந்தது. அப்போது, முதலமைச்சரை மிக அருகில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், வாலிபர் ஒருவர் திடீரென போலீசாரின் பாதுகாப்பு வளையத்தை மீறி, வேகமாகச் சென்ற வாகனங்களுக்கு நடுவே புகுந்தார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tamil-nadu-weather-update-heavy-rain-alert-for-next-one-week-check-chennai-forecast-cbseo-4ltz4ev

விஜய் கார் முன் பாயந்த நபர்

இதனால் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். விபத்தோ அல்லது அசம்பாவிதமோ நடப்பதற்குள், அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த வாலிபரைத் துரிதமாகச் செயல்பட்டுப் பிடித்து அப்புறப்படுத்தினர். பிடிபட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், அவர் முதல்வரைப் பார்க்கும் ஆர்வத்தில் மட்டுமே அவ்வாறு செய்தார் என்பது தெரியவந்ததால், அவருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். முதலமைச்சரின் பாதுகாப்பைக் குறைக்காமல், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத புதிய முறையைக் கையாண்டாலும், இதுபோன்ற திடீர் ஊடுருவல்கள் பெரும் பாதுகாப்பு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.