MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Amma Unavagam: ஏழைகளின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்களுக்கு உயிர் கொடுத்த தளபதி! முதல்வர் விஜய் அதிரடி!

Amma Unavagam: ஏழைகளின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்களுக்கு உயிர் கொடுத்த தளபதி! முதல்வர் விஜய் அதிரடி!

Amma Unavagam: ஜெயலலிதாவின் புரட்சி திட்டமான அம்மா உணவகங்களை தரம் உயர்த்தி பராமரிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது ஏழை, எளிய மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : May 19 2026, 12:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஜெயலலிதா கொண்டு வந்த புரட்சி திட்டம்
Image Credit : our own

ஜெயலலிதா கொண்டு வந்த புரட்சி திட்டம்

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் க்லடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று அம்மா உணவகம் தொடங்கி வைக்கப்பட்டது. அம்மா உணவகங்களில் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் பிரத்யேகமான உணவு வகைகள் மிகக் குறைந்த விலையில் நிர்ணயம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் பின்பு தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது.

சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் அம்மா உணவகங்கள் பெரிதும் கைகொடுத்து உதவின. பட்டினியாக இருக்கும் ஏழை, எளிய மக்களின் பசியை தீர்க்கும் உன்னதமான இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. பெரு வெள்ளம், மழைக்காலங்களில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
திமுக ஆட்சியில் பராமரிப்பில்லை
Image Credit : X/SriramMadras

திமுக ஆட்சியில் பராமரிப்பில்லை

பின்பு கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி மாறியது. திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் அம்மா உணவகங்களை சரியாக பரமாரிக்கவில்லை என்றும் உணவுகளின் தரம் மோசமாக மாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்மா உணவகங்களை பராமரிக்க நிதி ஒதுக்கினார். ஆனால் பெயரளவுக்கு மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளதாகவும், பல்வேறு இடங்களில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டதாகவும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் நிறுத்தி வருவதாகவும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன.

அரசியலில் வரலாறு படைத்த விஜய்

இந்த நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ஆட்சி மாறியது. முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. திமுக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் தவெக ஆட்சியமைத்தது. விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். தேர்தலுக்கு முன்பாக விஜய் திமுகவை கடுமையாக எதிர்த்தாலும் முதல்வரான பிறகு, திமுக கொண்டு வந்த புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை என பல திட்டங்கள் தொடரும் என்று அறிவித்துள்ளார்.

33
அம்மா உணவங்களை தரம் உயர்த்த விஜய் உத்தரவு
Image Credit : our own

அம்மா உணவங்களை தரம் உயர்த்த விஜய் உத்தரவு

இதேபோல் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவங்களையும் மீண்டும் புத்துயிர் செய்ய வேண்டும் என விஜய்யிடம் பலரும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுள்ள முதல்வர் விஜய் அம்மா உணவங்களை மீண்டும் பழையபடி மேம்படுத்த அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள். நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.

ஏழைகள் மகிழ்ச்சி

சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய அரசுத் துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும். சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

இந்த மறுசீரமைப்பிற்கும். பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்'' என்று கூறப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவது ஏழை, எளிய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஒரே தேசம் ஒரே ஆட்சி மாநில அரசுகளே கூடாது என்பதுதான் அவர்களின் திட்டம் ! திருமாவளவன் அதிரடி
Recommended image2
Now Playing
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை பார்க்கணும் ! - கேரளாவில் நவராத்திரி விழாவுக்கு வரும் மக்கள் கருத்து !
Recommended image3
Now Playing
மாற்றுத்திறனாளிகள் தின விழா : காட்பாடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுகளை வழங்கிய விஜய் பாலாஜி!
Related Stories
Recommended image1
முன்பு அம்மா உணவகம்..இப்போ குழந்தை நல பரிசு பெட்டகம்.. அதிமுக திட்டங்களை ஒழிக்கும் திமுக.. பொதுமக்கள் குமுறல்
Recommended image2
ஜெயலலிதாவை காப்பி அடித்த பாஜக.. உ.பியில் ஆட்சிக்கு வந்தால் அம்மா உணவகம்.. பரபரக்கும் தேர்தல் வாக்குறுதி.
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved