MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்.! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ED! முதல்வர் விஜய் என்ன செய்யப்போகிறார்?

Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்.! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ED! முதல்வர் விஜய் என்ன செய்யப்போகிறார்?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் மோசடி வழக்கில், அவரை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மீண்டும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு அவருக்கு அனுமதி வழங்குமா?.

2 Min read
Author : vinoth kumar
| Updated : May 19 2026, 12:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வேலை வாங்கி தருவதாக மோசடி
Image Credit : our own

வேலை வாங்கி தருவதாக மோசடி

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் செந்தில் பாலாஜி மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகள் அமைச்சராக இருந்து வருகிறார். இவர் 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததை அடுத்து அமலாக்கத்துறையால் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டு 471 நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
செந்தில் பாலாஜி பதவி ராஜினாமா
Image Credit : our own

செந்தில் பாலாஜி பதவி ராஜினாமா

அதனை தொடர்ந்து அவருக்கு தமிழக அமைச்சரவையிலும் இடம் அளிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராகக் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பதவி வகித்து வந்தார். இதற்கு உச்சநீதிமன்றம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

34
அனுமதி தராமல் திமுக ஆட்சியில் இழுத்தடிப்பு
Image Credit : Google

அனுமதி தராமல் திமுக ஆட்சியில் இழுத்தடிப்பு

இதனிடையே செந்தில் பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் அவரிடம் அடுத்த கட்ட விசாரணைகள் நடத்த மாநில அரசின் அனுமதி தேவை. இது தொடர்பாக 2025-ம் ஆண்டு மே 25-ம் தேதி ஆளுநராக ஆர்.என்.ரவிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. ஆனால் 2025 அக்டோபரில் ஆளுநருக்கு அப்போதைய தலைமை செயலாளர் எழுதிய கடிதத்தில், மாநில அரசுதான் அரசு ஊழியரை விசாரிக்க முடியும்; அமலாக்கத்துறை தமிழக அரசுக்குதான் கடிதம் எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடிதம் எழுதியும் அனுமதி கொடுக்காமல் தமிழக அரசு இழுத்தடித்து வந்தது. இதன் காரணமாக இதுவரை நீதிமன்ற விசாரணை தொடங்கவில்லை.

44
மீண்டும் அமலாக்கத்துறை கடிதம்
Image Credit : Asianet News

மீண்டும் அமலாக்கத்துறை கடிதம்

இந்நிலையில் தற்போது, செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தலைமை செயலாளர் சாய் குமாருக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில் தகுந்த ஆதாரங்கள், ரகசிய விசாரணை குறிப்புகள், புகார் நகல் ஆகியவற்றை உள்ளடக்கிய பெண் டிரைவ் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது திமுக எம்.எல்.ஏவாக உள்ள செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தமிழக அரசு அனுமதி தருமா? அல்லது மீண்டும் நீடிக்கப்படுமா என்பது விரைவில் தெரிய வரும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக மோசடி புகார் குறித்து அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திமுக
செந்தில் பாலாஜி
மு. க. ஸ்டாலின்
டிவி.கே. விஜய்
அமலாக்க இயக்குனரகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
திமுக ஆட்சியில் சொந்த மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது": சென்னையில் செந்தில் பாலாஜி பேட்டி!
Recommended image2
Now Playing
21 தற்காலிக செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்!
Recommended image3
Business Training: மாத வருமானம் ரூ.30 ஆயிரம் நிச்சயம்.! லாபத்தை அள்ளித்தரும் மைக்ரோ கிரீன்ஸ்.! 3 நாள் பயிற்சி காத்திருக்கு.!
Related Stories
Recommended image1
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!
Recommended image2
Tamilnadu Power Cut: எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமா முடிச்சுடுங்க! தமிழகத்தில் நாளை 5 முதல் 8 மணி நேரம் மின்தடை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved