MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tamilnadu Government: 10-வது படித்திருந்தால் போதும்! லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

Tamilnadu Government: 10-வது படித்திருந்தால் போதும்! லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

Wedding Photography Training : படித்த படிப்பிற்கு ஏற்ப வேலை வழங்கிட தனியார் நிறுவனங்கள் இணைந்து அரசு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சொந்த தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்காக பயிற்சி மட்டுமல்ல கடன் உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 10 2026, 09:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழக அரசு
Image Credit : Asianet News

தமிழக அரசு

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி பல இடங்களுக்கு அலைந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. படித்த படிப்பிற்கு ஏற்ப வேலை வழங்கிட தனியார் நிறுவனங்கள் இணைந்து அரசு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சொந்த தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்காக பயிற்சி மட்டுமல்ல கடன் உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 5 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி வரும் ஜூலை 20 முதல் 24 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி
Image Credit : Asianet News

திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி

இப்பயிற்சியில் திருமண புகைப்படம் எடுத்தல் என்றால் என்ன, புகைப்படம் எடுத்தல் பற்றிய வரலாறு, புகைப்படத்தின் அடிப்படைகள், ஒளியமைப்பு, கலவை மற்றும் மேம்பட்ட புகைப்பட நுட்பங்கள் கவனம் செலுத்தும் முறைகள், திருமண புகைப்படம் எடுத்தல் என்றால் என்ன, பாரம்பரிய புகைப்படம் எடுத்தல் மேம்பட்ட நுட்பங்கள், நேர்மையான புகைப்படம் எடுத்தல் மேம்பட்ட நுட்பங்கள், திருமண உருவப்படங்கள் மேம்பட்ட நுட்பங்கள். உங்கள் குழுவை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல், உயர்நிலை புகைப்பட மறுசீரமைப்பு, ஆல்பம் வடிவமைப்பு, திருமண புகைப்படக் கலைஞர் மற்றும் திருமணமாக எப்படி சம்பாதிப்பது புகைப்பட வணிகம், திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.

Related Articles

Related image1
New Ration Card: புதிய ரேஷன் கார்டு எப்போ கிடைக்கும்? காத்திருந்த மக்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்.!
Related image2
School Student: பள்ளி வேலை நாட்களில் அதிரடி மாற்றம்! இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும்!
34
குறைந்த வாடகையில் தங்கும் விடுதி
Image Credit : our own

குறைந்த வாடகையில் தங்கும் விடுதி

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

44
போட்டோகிராபி தொழில் தொடங்குவது எப்படி?
Image Credit : our own

போட்டோகிராபி தொழில் தொடங்குவது எப்படி?

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி /கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சிட்கோ தொழிற்பேட்டை இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல் சென்னை - 600 032. 8668102600 / 7806918309 முன்பதிவு அவசியம். அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திருமணம்
தமிழ்நாடு அரசு
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
New Ration Card: புதிய ரேஷன் கார்டு எப்போ கிடைக்கும்? காத்திருந்த மக்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்.!
Recommended image2
Now Playing
சமூக அவலங்களுக்கு எதிரான AIYF கையெழுத்து இயக்கம்! தொல். திருமாவளவன்
Recommended image3
Now Playing
கல்வித்துறையில் அரசியல் புகுந்தால் சும்மா இருக்க மாட்டோம்... அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி வார்னிங்!
Related Stories
Recommended image1
New Ration Card: புதிய ரேஷன் கார்டு எப்போ கிடைக்கும்? காத்திருந்த மக்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்.!
Recommended image2
School Student: பள்ளி வேலை நாட்களில் அதிரடி மாற்றம்! இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved