உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில், ரஷ்யா போர் தொடங்கியது. இதனையடுத்து அங்கு மருத்துவம் படிக்கச் சென்ற 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தாயகம் திரும்பும் சூழல் ஏற்பட்டது. அந்த மாணவர்களின் படிப்பும், எதிர்காலமும் கேள்விக்குறியான நிலையில் அவர்கள் இந்தியாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்றும் பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்தது.
இதையும் படிங்க: OPS க்கு வந்த டெல்லி தொலைபேசி அழைப்பு.? OPRயிடம் கூறிய ரகசியம்..? அதிமுக Ex நிர்வாகி கூறிய பரபரப்பு தகவல்

மேலும் உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க விதிகளில் இடமில்லை. உக்ரைன் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்கள் இந்தியாவில் சேர முடியாது. இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களை, இந்தியாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான முடிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. அதேசமயம் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பிற கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் எடுத்து வருகிறது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: புதிதாக 14 பேரை அதிமுக மாவட்ட செயலாளர்களாக நியமித்து அதிரடி காட்டிய ஓபிஎஸ்..! அதிர்ச்சியில் இபிஎஸ்

இதுக்குறித்து அவர் எழுதிய கடிதத்தில், ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்த போரின் காரணமாக அங்கு பயின்ற மருத்துவம் பயின்ற 2000 மாணவர்கள் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். இந்தியாவிலேயே அதிகளவிலான மருத்துவ மாணவர்கள் உக்ரைனிலிருந்து தமிழகத்திற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மக்களவை கூட்டத்தொடரில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. உக்ரைனிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு இதுதொடர்பாக முழு ஒத்துழைப்பை அளிக்கும். இந்தியாவில் தகுந்த மருத்துவ கல்லூரிகளில் தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்க நடவடிக்கை தேவை. மேலும் மருத்துவ மாணவர்களின் கல்வியை பாதிக்காத வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசின் முடிவால் மருத்துவ மாணவர்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
