தமிழகத்தில் வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்கக் கூடிய முதல்வர் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தண்டையார் பேட்டையில் தொடங்கி வைக்கிறார்.

தனியாக வசிக்கக் கூடிய 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கும் இத்திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாநிலம் முழுவதும் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

Scroll to load tweet…

அந்த வகையில் தமிழகம் முழுவதும் 20,42,657 முதியவர்கள் மற்றும் 1,27,797 மாற்றுத் திறனாளிகள் என மொத்தமாக 21,70,454 பயனாளர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. முதல்வர் தாயுமானவர் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் இன்று முதல் விரிவுபடுத்தப்படுகிறது.