MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மேற்கு மண்டலத்தில் இருந்து தான் அதிமுக தோல்வி தொடங்கப்போகுது.! எடப்பாடிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்

மேற்கு மண்டலத்தில் இருந்து தான் அதிமுக தோல்வி தொடங்கப்போகுது.! எடப்பாடிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார். மேலும், திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

4 Min read
Ajmal Khan
Published : Aug 11 2025, 12:38 PM IST| Updated : Aug 11 2025, 12:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
புதிய திட்டங்களை தொடங்கிய ஸ்டாலின்
Image Credit : Google

புதிய திட்டங்களை தொடங்கிய ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.8.2025) திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், கலைஞரால் உருவாக்கப்பட்ட இந்த திருப்பூர் மாவட்டத்திற்கு கடந்த 4 ஆண்டுகாலத்தில் திராவிட மாடல் ஆட்சியில் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக கூறி அதனை பட்டியலிட்டார். 

இருந்த போதும் என்னதான் இருந்தாலும் உங்கள் மாவட்டத்துக்கு வந்துவிட்டு, திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் போக முடியுமா? சாமிநாதன் விடமாட்டார் - கயல்விழி செல்வராஜ் விடமாட்டார் - நீங்களும் விடமாட்டீர்கள். அதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு சில அறிவிப்புக்களை வெளியிட விரும்புகிறேன்.

26
ஸ்டாலின் புதிய அறிவிப்புகள்
Image Credit : F/mk stalin

ஸ்டாலின் புதிய அறிவிப்புகள்

முதலாவது அறிவிப்பு

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் அடுத்த கட்டமான, நீராறு-நல்லாறு மற்றும் ஆனைமலையாறு திட்டமானது, திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. அதை செயல்படுத்த, கேரள மாநில அரசிடம் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நம்முடைய விவசாயிகளின் இந்த கனவுத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

இரண்டாவது அறிவிப்பு

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பாசனப்பகுதியில், பல வாய்க்கால்கள் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் இருப்பதாக பாசன சங்கத் தலைவர்களும் - விவசாயிகளும் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்று, வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்காக இந்த ஆண்டே 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

மூன்றாவது அறிவுப்பு

திருப்பூர் மாநகரத்தில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கின்ற வகையில், நவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட மைய நூலக கட்டடம் 9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். திருப்பூர் மாநகராட்சி அமர்ஜோதி கார்டன் பகுதியில், பல்நோக்கு விளையாட்டு அரங்கம் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

நான்காவது அறிவிப்பு

காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் வழங்கலை மேம்படுத்த, பரஞ்சேர்வழி சிவன்மலை, கீரனூர் ஊராட்சிகளில் 11 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

Related Articles

Related image1
மீண்டும் வெளிநாட்டிற்கு பறக்க போகும் ஸ்டாலின்.! இந்த முறை எந்த நாட்டிற்கு, எப்போது தெரியுமா.?
Related image2
என் மூத்த பிள்ளை குரு இருந்திருந்தால்... மாநாட்டில் திடீரென காடுவெட்டியாரை நினைவுகூர்ந்த ராமதாஸ் - அரங்கை அதிரவிட்ட தொண்டர்கள்
36
புதிய 7 அறிவிப்புகள்
Image Credit : Asianet News

புதிய 7 அறிவிப்புகள்

ஐந்தாவது அறிவிப்பு

தாராபுரம் வட்டத்தில் இருக்கின்ற வேளாண் பெருமக்கள் பயன்பெறும் வகையில், நஞ்சியம்பாளையம் அருகே உப்பாற்றின் குறுக்கே, 7 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.

ஆறாவது அறிவிப்பு

ஊத்துக்குளி வட்டத்தில் ஆறரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.

ஏழாவது அறிவிப்பு

உடுமலைப்பேட்டை பகுதியில் இருந்து சட்டத் துறை அமைச்சராக பதவி ஏற்று, உடுமலைப்பேட்டை அரசு கல்லூரி அமைக்க 25 ஏக்கர் நிலம் வழங்கியவருமான மாண்புமிகு எஸ்.ஜே. சாதிக் பாட்சா அவர்களுடைய பெயரில், தாஜ் தியேட்டர் அருகில் இருக்கக்கூடிய சாலைக்கு அவருடைய பெயர் சூட்டப்படும்!

46
மேற்கு மண்டலத்தில் அதிமுக தோல்வி
Image Credit : FACEBOOK/ MKSTALIN AND edappadi palanisamy

மேற்கு மண்டலத்தில் அதிமுக தோல்வி

இன்றைக்கு பார்க்கிறோம் – எதிர்க்கட்சித் தலைவர் திரு. பழனிசாமி அவர்கள் இந்த பகுதிக்கு வந்தால் மட்டும் தன்னை மேற்கு மண்டலத்துக்காரர் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் உறுதியோடு சொல்கிறேன் - பழனிசாமி அவர்களின் ஆட்சிக் காலத்தை விட, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில்தான் மேற்கு மண்டலத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கு அதிக திட்டங்கள், சாதனைகள் செய்யப்பட்டிருக்கிறது - தொடர்ந்து செய்யப்பட்டும் - தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம் - இன்னும் தொடர்ந்து நாங்கள் தான் செய்து கொண்டு இருப்போம். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

அதனால் தான் சொல்கிறேன், எந்த தைரியத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இந்த பகுதியில் இருந்து தன்னுடைய பிரசாரத்தை தொடங்குவார் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், நிச்சயமாகச் சொல்கிறேன் - அதிமுக-வின் 2026 தேர்தல் தோல்வி இங்கே இருந்துதான் தொடங்கப் போகிறது. ஏற்கனவே, 2024 தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்களில் இந்த மண்டலத்திலிருந்து தான் அவர் தோல்வியை பார்த்துவிட்டார். அதுதான் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் அது தொடரப் போகின்றது. ஊர் ஊராக சுந்தரம் டிராவல்ஸ் பஸ்ஸில் சென்று, பொய்களை கத்தி கத்தி உரக்கப் பேசினால், தன்னுடைய அலங்கோல ஆட்சியை மக்கள் மறந்துவிட்டு, இவர் பேசுவதை எல்லாம் நம்புவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்! ஆனால், அவர் ஆசையில் மண் விழுகின்ற மாதிரி, உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் என்று நம்முடைய அரசின் திட்டங்கள் மக்களிடம் பெரிய ‘ஹிட்’ ஆகிவிட்டது.

56
 இது உங்களுக்கு அவமானமாக இல்லையா?
Image Credit : ANI

இது உங்களுக்கு அவமானமாக இல்லையா?

அந்த வயிற்றெரிச்சலில் தான், தி.மு.க. அரசு மேலும், மேலும் ஸ்கோர் செய்துவிடக் கூடாது - மக்களுக்கு நன்மை நடந்திடக் கூடாது என்று மக்கள் நலத் திட்டங்களுக்கு தடை விதிக்க நீதிமன்றம் சென்றார்! ஆனால், நீதிமன்றம் என்ன சொன்னது? அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக் கொள்வதற்கு நீதிமன்றத்தை நாடுவது தவறு என்று சொன்னது மட்டுமல்ல, நம்முடைய அரசுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் - 10 இலட்சம் ரூபாய் நன்கொடை தருவது போல - மாண்பமை உச்சநீதிமன்றம் ‘ஃபைன்’ போட்டு அனுப்பிவிட்டார்கள். இது உங்களுக்கு அவமானமாக இல்லையா? அதுமட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே பெஸ்ட் மாநிலம் தமிழ்நாடு தான் என்று, நாங்கள் சொல்லவில்லை - அவர்களின் கூட்டணியில் இருக்கின்ற ஒன்றிய பா.ஜ.க. அரசே அறிக்கையை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படி தொடர்ந்து அவருக்கு அடி மேல் அடி விழுகிறது. இதனால், விரக்தியின் உச்சத்துக்கே எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் போய்விட்டார். அதனால்தான், முதலமைச்சர் என்கின்ற மக்கள் அளித்த பொறுப்புக்குக் கூட மரியாதை தராமல், தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசிக் கொண்டு வருகிறார். அதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படவில்லை. இன்னும் பேசுங்கள்; இன்னும் இறங்கிப் பேசுங்கள். நான் அதைப் பற்றி கவலையேபடவில்லை. எங்கள் பணி, மக்கள் பணி. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லி, என்னுடைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும், பேச்சைக் குறை – செயலில் மட்டுமே காண்பிக்கவேண்டும்.

66
 சவுண்டு விடும்
Image Credit : Asianet News

சவுண்டு விடும்

ஏதோ தன்னை எம்.ஜி.ஆர்., என்று நினைத்துக் கொண்டு, ஜெயலலிதா அம்மையார் மாதிரி நினைத்துக் கொண்டு சவுண்டு விடுகிறார். ஆனால், பாவம் அவருக்குத் தெரியவில்லை. அவருடைய வண்டி கிளம்பியதும், சொந்த கட்சிக்காரங்களே என்ன கமெண்ட் அடிக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியவில்லை. அவருடைய எந்த சதித் திட்டமும் நம்முடைய அரசின் சாதனைகள் முன்னால் எடுபடவில்லை, இனியும் எடுபடாது!நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரைக்கும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து நாம் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

அனைவருக்குமான நல்லாட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம். இந்த நல்லாட்சி எந்நாளும் தொடரவேண்டும் என்றுதான் மக்களாகிய நீங்கள் விரும்புகிறீர்கள். இந்த நல்லாட்சி எந்நாளும் தொடரும். உங்கள் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்! திராவிட மாடல் 2.0-ல் இதுவரை அடையாத புதிய உச்சங்களை தமிழ்நாடு நிச்சயம் அடையும்! இது உறுதி! உறுதி! உறுதி! இதை உங்களோடு சேர்ந்து முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் உறுதி எடுக்கிறான்! என பேசினார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
மு. க. ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி அதிமுக
அதிமுக பாஜக கூட்டணி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved