- Home
- Tamil Nadu News
- மீண்டும் வெளிநாட்டிற்கு பறக்க போகும் ஸ்டாலின்.! இந்த முறை எந்த நாட்டிற்கு, எப்போது தெரியுமா.?
மீண்டும் வெளிநாட்டிற்கு பறக்க போகும் ஸ்டாலின்.! இந்த முறை எந்த நாட்டிற்கு, எப்போது தெரியுமா.?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டன் மற்றும் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்தும், அதனை திறம்பட செயல்படுத்தியும் வருகிறது. குறிப்பாக, 2030ம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார மதிப்பு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கை முதல்வர் முன்னிறுத்தி அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி விடுத்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களை சந்தித்து சர்வதேச அளவில் தமிழகத்திற்கு முதலீட்டை கொண்டுவரும் வண்ணம், முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றார். 17 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ளன சான்பிரான்சிஸ்கோவில் உள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து முதலீடுகளை ஈர்த்தார்.
சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் இன்வெஸ்டர் கான்கிளேவ் (investors conclave) முதலீட்டாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று உரை நிகழ்த்தினார் மேலும், ஆக.31ம் தேதி புலம் பெயர் தமிழர்களை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது
அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் முதல் வாரத்தில் லண்டனில் உள்ள கிங் கல்லூரியில் உரையாற்ற உள்ளார். இதைத்தொடர்ந்து லண்டனில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்க உள்ளார்.
லண்டன் மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க ஆகஸ்ட் 31ஆம் தேதி புறப்பட்டு செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை திரும்பும் வகையில் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பல புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.