Asianet News TamilAsianet News Tamil

பணிக்காலத்தில் மரணம்.. வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்

தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

Chief Minister MK Stalin issued appointment orders on compassionate basis to heirs
Author
First Published Jan 3, 2023, 3:28 PM IST

தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (3.1.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய 101 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை  வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

Chief Minister MK Stalin issued appointment orders on compassionate basis to heirs

இதையும் படிங்க..Video : சுமார் 360 அடி உயரம்; உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியின் விளிம்பில் நின்ற பெண் - பதறவைக்கும் வீடியோ

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய 101 பணியாளர்களின் வாரிசுதாரர்களில், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு 17 நபர்களுக்கும், இளநிலை உதவியாளர் (கணக்கு) பணியிடத்திற்கு 6 நபர்களுக்கும், மின் கணக்கீட்டாளர் பணியிடத்திற்கு 11 நபர்களுக்கும், களப்பணி உதவியாளர் பணியிடத்திற்கு 45 நபர்களுக்கும், தட்டச்சர் பணியிடத்திற்கு 3 நபர்களுக்கும், அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 5 நபர்களுக்கும், உதவி வரைவாளர் பணியிடத்திற்கு 1 நபருக்கும், காவலாளி பணியிடத்திற்கு 13 நபர்களுக்கும், பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க..Swiggy : புத்தாண்டில் காண்டம் விற்பனை அமோகம்.. நம்பர் 1 இடத்தை பிடித்த பிரியாணி - ஸ்விக்கி சூப்பர் தகவல்

Chief Minister MK Stalin issued appointment orders on compassionate basis to heirs

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., எரிசக்தித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர்/ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., இயக்குநர் (பகிர்மானம்) திரு. சிவலிங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..ஹே ராம் முதல் மொழி திணிப்பு வரை.. கடைசியில் கமல் ஹாசனுக்கு ராகுல் கொடுத்த சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios