Video : சுமார் 360 அடி உயரம்; உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியின் விளிம்பில் நின்ற பெண் - பதறவைக்கும் வீடியோ
360 அடி உயரமுள்ள நீர்வீழ்ச்சியின் விளிம்பில் ஒரு பெண் சாய்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சுமார் 360 அடி உயரமுள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சியின் விளிம்பில் பெண் ஒருவர் சாய்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் நான்காவது பெரிய நதியான ஜம்பேசி (Zambezi) நதியிலுள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சி ஜிம்பாப்வே, ஜாம்பியா நாடுகளின் எல்லையில் 1.7 கிலோமீட்டர் அகலத்துக்கு, 108 மீட்டர் உயரத்துக்கு அமைந்துள்ளது. 1855 ஆம் ஆண்டில் டேவிட் லிவிங்ஸ்டன் கண்டுபிடித்தார். விக்டோரியா நீர்வீழ்ச்சி என்ற பெயர் இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.
இந்த அருவியின் மேல் நிலவின் ஒளியிலும் வானவில் தோன்றி ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இந்த நதி மிகவும் அகலமாக விழுவதால், தண்ணீர் சாரலால் இந்த வானவில் தோன்றி பிரமிப்பை ஏற்படுத்துகிறது.இந்த நதி ஜாம்பியா, அங்கோலா, நமீபியா,போட்ஸ்வானா,ஜிம்பாப்வே மற்றும் மொசாம்பிக்யூ ஆகிய 6 நாடுகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றது.
இதையும் படிங்க..இடம் மாற போகும் திருப்பதி கோவில்.. 70 லட்சம் வீட்டை கோவிலுக்கு எழுதிக்கொடுத்த தமிழ்நாட்டு பெண் !!
ஆப்பிரிக்காவில் உள்ள நைல் நதி, காங்கோ நதி, நைஜர் நதி ஆகியவற்றிற்கும் பின் மிக நீளமான நதியாக இது உள்ளது. உலகிலேயே அதிக அகலமான அதாவது 5577 அடியும், 262-304 அடி உயரத்திலிருந்தும் விழுகிறது. இந்த நிலையில் விக்டோரியா நீர்வீழ்ச்சியின் விளிம்பில் சுற்றுலாப் பயணி ஒருவர் சாய்ந்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. தைரியமான ஒருவரால் தான் இதை முயற்சிக்க முடியும் என்று அந்த வீடியோவை பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.
நமக்கே பயத்தை ஏற்படுத்துகிறது. இந்த வீடியோ ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோ 19 மில்லியனுக்கும் மேலான பார்வைகளையும், 2 லட்சம் லைக்குகளையும் நெருங்க உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றாலும், சிலர் இதுபோன்ற அபாயகரமான செயல்களை செய்வது ஆபத்தானது என்றும் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..TN Rain Alert : ஜனவரி 3 முதல் 5 வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை