Swiggy : புத்தாண்டில் காண்டம் விற்பனை அமோகம்.. நம்பர் 1 இடத்தை பிடித்த பிரியாணி - ஸ்விக்கி சூப்பர் தகவல்
புத்தாண்டு தினத்தில் உணவு விநியோகத்தில் முன்னணி நிறுவனமான ஸ்விக்கி புதிய சாதனை படைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டு புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்கு நிகழ்வுகள் டிசம்பர் 31 ஆன நியூ இயர் ஈவினிங் அன்று பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடினர்.
இந்நிலையில், டிசம்பர் 31 அன்று ஆன்லைனில் பெறப்பட்ட ஆர்டர்கள் குறித்து ஸ்விக்கி ட்விட்டரில் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, அன்று இரவு 10.25 மணி வரையில், ஹைதராபாத் பிரியாணிக்கு 75.4 சதவீதம் அதாவது, 3.50 லட்சம் ஆர்டர்கள் வந்துள்ளது.
இதையும் படிங்க..Video : சுமார் 360 அடி உயரம்; உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியின் விளிம்பில் நின்ற பெண் - பதறவைக்கும் வீடியோ
இந்த ஆர்டர்கள் லக்னோ பிரியாணிக்கு 14.2 சதவீதம் மற்றும் கொல்கத்தா பிரியாணிக்கு 10.4 சதவீதம் ஆர்டர்கள் வந்துள்ளதாகவும் ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை 7.20 மணியளவில் 1.65 லட்சம் பிரியாணி டெலிவரி செய்யப்பட்டது. ஹைதராபாத்தின் பாவர்சி பிரியாணி டிசம்பர் 31, 2022ல் மட்டும் 15 டன் பிரியாணியை தயாரித்திருந்ததும் தெரியவந்தது.
டொமினோஸ் இந்தியாவில் 61,287 பீட்சா டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வாயிலாக 1.76 பாக்கெட் சிப்ஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க இந்தியா முழுவதும் நேற்றிரவு 9.18 மணியளவில் 12,344 பேர் கிச்சடி ஆர்டர் செய்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஸ்விக்கி நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில், டாமினோஸ் இந்தியா 61,000 பீட்சாக்களை டெலிவரி செய்துள்ளது. சனிக்கிழமை இரவில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்டில் 7 லட்சம் சிப்ஸ் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுளதாகவும் தகவல்கள் கூறியுள்ளது. புத்தாண்டு இரவில் 2757 ஆணுறைகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க..ஹே ராம் முதல் மொழி திணிப்பு வரை.. கடைசியில் கமல் ஹாசனுக்கு ராகுல் கொடுத்த சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?