சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் படிக்க சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒரு மாணவர் இரண்டு நிமிடங்களில் F1 விசா பெற்றுள்ளார். 

சென்னை மாணவருக்கு 2 நிமிடங்களில் F1 விசா : நவ நாகரீக தொழிங்நுட்ப வளர்ச்சி காலத்தில் வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி படிக்க வேண்டும் என்பது இன்றைய இளைஞர்களின் கனவாக உள்ளது. அதிலும் அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது தீரா காதலாகும். இதற்காக பல முறை விசாக்காக முயற்சித்தும் தோல்வியே அடைந்த பல இளைஞர்களும் உண்டு, கஜினி முகமது போல 17 முறை தோல்வி அடைந்து 18வது முறை விசா பெற்ற மாணவர்களும் உண்டு, இப்படி பல தவிப்புகள் உள்ள நிலையில் 2 நிமிடங்களில் சென்னை மாணவர் ஒருவர் விசா பெற்ற சம்பவம் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த மாணவருக்கு எப்படி அமெரிக்காவின் F1 விசா கிடைத்து என்பதை தற்போது பார்க்கலாம்.

அமெரிக்காவில் படிக்க விரும்பிய மாணவன்

சான் டியாகோ மாநில பல்கலைக்கழகத்தில் படிக்க மாணவர் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு சென்னையில் உள்ள அமெரிக்க தூதராகத்தில் விசாவிற்காக விண்ணப்பித்துள்ளார். அந்த மாணவர் ரெடிட்டில் நேர்காணலின் விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். விளையாட்டு கவனம் செலுத்தி கணினி அறிவியலில் இளங்கலை அறிவியல் படிப்பிற்காக விண்ணப்பித்திருந்தார். இதற்காக அந்த மாணவருக்கு விசா நேர்காணல் காலை 9:30 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அந்த மாணவருக்கு முன்கூட்டியே காலை 9:00 மணிக்குள் உள்ளே அனுமதிக்கப்பட்டார். அப்போது அமெரிக்க அதிகாரிகளால் மாணவரிடம் நேர்காணல் சுமார் இரண்டு நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. விசா அதிகாரி (VO) நேர்காணலை திறமையாக நடத்தினார்.

அமெரிக்க அதிகாரியோடு மாணவனின் நேர்காணல்

அமெரிக்க அதிகாரி மாணவரிடம் நேர்காணலின் போது அந்த மாணவர்களிடம் இந்தியாவை விட அமெரிக்காவில் படிக்க ஏன் தேர்வு செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த மாணவர், கலிபோர்னியாவில் கிடைக்கும் சிறப்பு விளையாட்டு மேம்பாட்டு பாடதிட்டம் மற்றும் தனக்கு பிடிக்க விருப்பத்தேர்வுகள் இந்தியாவை விட அதிகமாக உள்ளதாக மாணவர் விளக்கினார். இதனையடுத்து அமெரிகாவில் படிக்க அதிகமான செலவு ஏற்படுமே என்ன செய்வீர்கள் என்ற நிதி நிலவரம் தொடர்பான கேள்விக்குமருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களாக தனது பெற்றோர் இருப்பதாகவும் மேலும் மருத்துவர்களாகவும் இருக்கும் தங்கள் பெற்றோரால் கல்விச் செலவுகள் ஈடுகட்டப்படும் என்பதை மாணவர் உறுதிப்படுத்தினார்.

2 நிமிடங்களில் கையில் கிடைத்த F1 விசா

இதனையடுத்து மாணவர் தனது வலது கையை பயோமெட்ரிக் ஸ்கேன் செய்த அடுத்த நொடி விசா அந்த இடத்திலேயே அங்கீகரிக்கப்பட்டது. விசா ஒப்புதலுக்கான வெற்றிகரமான முதல் முயற்சியில் மாணவர் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்குள் அவர்களின் பாஸ்போர்ட் திருப்பித் தரப்படும் என்று விசா அதிகாரி மாணவரிடம் தெரிவித்தார். இரண்டு நிமிடங்களில் அமெரிக்காவின் F1 விசா மாணவருக்கு கிடைத்தை ஆச்சரியமாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.