இந்த வாரம் இந்திய பங்குச்சந்தையின் போக்கை பணவீக்க விகிதம், அமெரிக்க இறக்குமதி வரிகள், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சர்வதேச சந்தை நிகழ்வுகள் தீர்மானிக்கும். இந்த வாரம் CPI, IIP தரவுகள், IPOக்கள் சந்தையை மேலும் நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்செக்ஸ், நிஃப்டியின் போக்கு இப்படித்தான் இருக்கும்
வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய சந்தைகளின் போக்கு எப்படி இருக்கும் என்பதை விட, அதனை வழிநடத்தும் விஷயங்கள் குறித்து தெரிந்துகொண்டால் பங்குச்சந்தை வர்த்தகத்தில் கலக்கலாம். அன்றாட நிகழ்வுகளும், அதன் தாக்கம் சந்தையில் எப்படி எதிரொலிக்கும் என்பதையும் தெரிந்திருக்கும் பட்டத்தில் சந்தை முதலீடுகள் முதலீட்டாளர்களுக்கு எப்போதும் லாபத்தையே கொடுக்கும். இந்தியாவின் பணவீக்க விகிதம், அமெரிக்க இறக்குமதி வரிகள், வெளிநாட்டு முதலீட்டாளரின் முதலீடுகள் (FII) மற்றும் சர்வதேச சந்தை நிகழ்வுகள் ஆகியவை இந்த வாரம் இந்திய பங்குசந்தையின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது.
கடந்த வார பங்குசந்தை நிலவரம்
பங்குசந்தை மூன்றாவது வாரமாக நிலையகா இருந்த நிலையில், கடந்த வாரம் உச்சத்தில் முடிந்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மதிப்பீட்டுக்கு மேற்பட்ட வட்டி விகிதக் குறைப்புகள், சந்தை நம்பிக்கையை அதிகரித்தது. இதனால் முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் களத்தில் குதித்ததால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை உச்சத்தை தொட்டன. வர்த்தக நேர முடியிவ்ல தேசிய பங்குச்சந்தை குறியீட்டென் நிஃப்டி 252 புள்ளிகள் அதிகரித்து 25 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. அதேபோல் சென்செக்ஸ் 738 புள்ளிகள் உயர்ந்து 82 ஆயிரத்து 189ல் முடிவடைந்தது. பேங்க் நிஃப்டியும் ஒன்றரை சதவீதம் வரை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.
Nifty 50: 252 புள்ளிகள் உயர்ந்து 25,000 தொட்டது
Sensex: 738 புள்ளிகள் உயர்ந்து, 82,189-ல் முடிந்தது.
Bank Nifty: 1.5% உயர்ந்து, 56,578.40-ல் முடிந்தது;
இது புதிய உச்சம்
இந்த வாரத்தில், இந்தியாவில் நுகர்வோர் குறியீட்டென் (CPI) தரவுகள் மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP) வெளியீடுகள் முக்கியமாக கண்காணிக்கப்படும். இவை வங்கி வட்டி விகிதங்களில் மாற்றத்திற்கான முன்னோக்குகளை வழங்கும் என்பதால் சந்தையை மேலும் மேல் நோக்கி நகர்த்தும் என்கின்றனர். சந்தை நிபுணர்கள். இந்த வாரம், Oswal Pumps என்ற நிறுவனம் முக்கிய IPO ஒன்றை தொடங்குகிறது. மேலும் 3 SME நிறுவனங்களும் IPOக்கு வருவதால் அவை சந்தையின் போக்கு ஏற்றம் காண வழிவகுக்கும்.
வெளிநாட்டு முதலீட்டாளர் (FII) நடவடிக்கை
FII எனப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த வாரம் ரூ.3,565 கோடி அளவிலான பங்குகளை விற்பனை செய்தனர். ஆனால், DII எனப்படும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ25,513 கோடி அளவில் முதலீடு செய்ததால், சந்தைக்கு நல்ல ஆதரவு இருந்தது. FIIs தற்போது இந்திய பங்குகளில் 18.8% பங்கு வைத்துள்ளார்கள், இது மற்ற வளர்ந்துவரும் சந்தைகளைவிட குறைவாகவே உள்ளது. தற்போது எப்ஐஐ முதலீடு அதிகரிக்கும் பட்சத்தில் சந்தை ஏற்றம் காணும்.
சர்வதேச நிலவரங்கள்
அமெரிக்க வரி சட்டங்கள் மற்றும் பாண்டு இழப்புகள் (bond yield) ஆகியவை சந்தை உணர்வுகளை பாதிக்கும். அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் மற்றும் அமெரிக்க-சீன வர்த்தக உறவுகள் மீண்டும் சரியான பாதைக்கு திரும்பும் எதிர்பார்ப்பு சந்தையில் சிறிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளன.
கார்ப்பரேட் செயல்கள்
Adani Ports, Asian Paints, Ambuja Cements உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வாரம் ex-dividend, ex-bonus அல்லது ex-split நிலைக்கு வர உள்ளன. இதனையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொழில்நுட்ப பார்வை (Technical View)
Nifty 50 தற்போது 24,500 – 25,100 இடையே நிலைத்திருக்கும் பகுதியின் மேல் எல்லையை அணுகியுள்ளது. 25,200க்கு மேல் அதிகரிக்கும் பட்சத்தில் இந்திய சந்தைகள் ராக்கெட் வேகத்தில் மேல் செல்லும். இதனால் அடுத்த இலக்கு 25,600 – 25,800 ஆக இருக்கும் என சநதை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் கீழ்மட்டத்தில், 24,400 – 24,600 எனற ஆதரவு நிலையை சந்தைபெறும்.
வட்டி விகிதக் குறைப்பு மூலம் வங்கி, வாகனம், ரியல் எஸ்டேட் துறை பங்குகள் விலை அதிகரிக்கும். FMCG மற்றும் IT துறை பங்குகள் விலை சாதகமாக இருக்காது என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வார பங்குசந்தை பயணம், உள்ளூர் பொருளாதார நிலவரம் மற்றும் உலக சுழற்சி தரவுகள் சார்ந்த முக்கிய முடிவுகளால் அமைந்திருக்கிறது. முதலீட்டாளர்கள், செய்திகள் மற்றும் தொழில்நுட்பங்களை தொடர்ந்து கண்காணித்து, தெரிவுசெய்யப்பட்ட வலிமையான பங்குகளில் கவனமாக முதலீடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
