ஆயிரத்தில் முதலீடு கோடி ரூபாய் சேமிப்பு: எஸ்ஐபி (SIP) சூட்சமம்!
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் மாதம் சிறிய தொகையை முதலீடு செய்து கோடிகளை சம்பாதிக்கலாம். குழந்தையின் எதிர்காலத்திற்காகவோ அல்லது நீண்டகால நிதி இலக்குகளுக்காகவோ SIP சிறந்த வழி.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
சிறிய மீன் கோட்டு பெரிய மீன் பிடிப்போம்
ஆயிரங்களில் முதலீடு செய்து எந்த பதற்றமும் இல்லாமல் கோடிகளை சம்பாதிக்கும் சூட்சமம் தான் இது. நீண்ட கால திட்டமிடலும் பொறுமையும் இருந்தால் ஒருவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அப்படியே அள்ளிக்கொடுக்கிறது Systematic Investment Plan. ஒருவர் தனது குழந்தைக்கு ஒருவயதாகும் போது இந்த திட்டத்தில் மாதம் 2 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய தொடங்கினால், 18வது வயதில் அந்த குழந்தைக்கு கோடி ரூபாய் பணம் கொடுக்கலாம். அது அந்த குழந்தையின் கல்லூரி படிப்புக்கு உதவியாக இருக்கும்.
கோடி ரூபாய் சேமிப்பது பெருங்கனவு அல்ல
மாதாந்திர சிறிய தொகைகளை ஒழுங்காக முதலீடு செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் பெரும் செல்வமாக மாற்றி அமைக்கலாம். வருடம் தோறும் சராசரி 15.5% வருமானம் கிடைக்கும் என எதிர்பார்த்தால், 18 ஆண்டுகளில் ஒரு ஒழுங்கான முதலீட்டாளர் ரூ.1 கோடியைத் தாண்டிய செல்வத்தை உருவாக்க முடியும்.
எஸ்ஐபி (SIP) என்றால் என்ன?
SIP என்பது மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும் ஒழுங்கான முறை. இதில் ஒவ்வொரு மாதமும் அல்லது காலாண்டுதோறும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்கிறோம். இது கம்பவுண்டிங் (compounding) எனப்படும் கூட்டுவட்டி வலிமையைப் பயன்படுத்தி, நீண்ட காலத்தில் பெரிய செல்வமாக வளர வாய்ப்பளிக்கிறது.நீண்டகால செல்வம் உருவாக்க சீரான முதலீட்டுத் திட்டமான SIP (Systematic Investment Plan) மிகப் பயனுள்ள வழியாக தொடர்ந்து அமைகிறது. மாதந்தோறும் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம், பொறுமையும் ஒழுங்கும் இருந்தால் ஒரு சாதாரண நபரும் கோடிக்கணக்கில் செல்வம் உருவாக்க முடியும்.சிறிய தொகையை நீண்டகாலம், ஒழுங்காக முதலீடு செய்தால், அது கடைசியில் கோடிகளாக வளரக்கூடும். இதற்கான சிறந்த உதாரணமாகவும் பாதுகாப்பான வழியாகவும் Systematic Investment Plan (SIP) அமைந்துள்ளது.
ரூ.2 ஆயிரத்தில் துவங்குங்களேன்
ஒருவர் மாதம் ₹2,000 முதலீடு செய்தால், 18 ஆண்டுகளில் மொத்த முதலீடு ₹4.32 லட்சமாகும். அதில் ₹19.2 லட்சம் வருமானமாக கிடைத்து, மொத்தமாக ₹23.5 லட்சம் ஆகும். அதேபோல் ஒருவர் மாதம் 4 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 47 லட்சம் ரூபாய் பெறலாம். அதாவது கொஞ்சம் கூடுதலாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் அவருக்கு ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் கிடைக்கும்
நம்பிக்கையூட்டும் கணக்கு பட்டியல்
மாதம் முதலீடு மொத்த முதலீடு சேரும் வருமானம் இறுதி செல்வம்
₹2,000 ₹4.32 லட்சம் ₹19.2 லட்சம் ₹23.5 லட்சம்
₹4,000 ₹8.64 லட்சம் ₹38.4 லட்சம் ₹47 லட்சம்
₹6,000 ₹12.96 லட்சம் ₹57.6 லட்சம் ₹70.5 லட்சம்
₹8,000 ₹17.28 லட்சம் ₹76.8 லட்சம் ₹94.1 லட்சம்
10,000 ₹21.6 லட்சம் ₹96 லட்சம் ₹1.18 கோடி
SIP-ன் பலன்கள்
சந்தை கீழே இருக்கும் போது அதிக யூனிட்கள், மேலே இருக்கும் போது குறைவான யூனிட்கள் வாங்கப்படுவதால் சராசரி விலை குறைகிறது. சந்தை ஏற்ற இறக்கங்களை சமாளிக்கிறது இதனால், சந்தையின் மாறுபாடுகளால் ஏற்படும் தாக்கங்களை குறைக்கிறது.மாதந்தோறும் சிறு தொகைகளை ஒதுக்குவதன் மூலம் நிதி ஒழுக்கத்தை வளர்க்கிறது. நீண்ட காலம் முதலீடு செய்தால், வட்டியில் வட்டி சேர்ந்து செல்வ வளர்ச்சி அதிவேகமாக நடக்கிறது. முதலீட்டை அதிகரிக்க, குறைக்க அல்லது சில மாதங்களுக்கு இடைநிறுத்தலாம்.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
பதற்றமில்லாமல், திட்டமிட்டு, தொடர்ந்து முதலீடு செய்வது முக்கியம். அதன் பலன் அதிகம். ஓய்வூதியத்திட்டம், குழந்தையின் கல்வி, வீடு வாங்குதல் போன்ற நீண்டகால இலக்குகளை அடைவதற்கான சிறந்த வழி SIP. தொடர்ந்து, பொறுமையாக முதலீடு செய்தால், மாதம் ₹2,000 முதலீடாலும் ஒரு கட்டத்தில் ₹1 கோடி செல்வத்தை உருவாக்க முடியும். “துவங்குங்கள். சிறிதளவிலேனும். ஆனால் தொடருங்கள்.”