பெண்குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) திட்டத்தில் மாதம் ரூ.250 முதலீடு செய்து ரூ.10 லட்சம் வரை பெறலாம். இத்திட்டத்தில் 8.2% கூட்டு வட்டி கிடைப்பதுடன், 15 ஆண்டுகள் முதலீடு செய்து, 6 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது.
குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்ற பெரிய செலவுகளுக்கு நிதி திட்டமிடல் மிகவும் அவசியமாகிறது. இந்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) பெண்குழந்தைகளின் நிதி எதிர்காலத்திற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. இது அரசு ஆதரவு திட்டம் என்பதால் முழுமையாக பாதுகாப்பானது. இந்தத் திட்டத்தில் 8.2% கூட்டு வட்டி கிடைக்கிறது. பெண்களின் உயர்கல்வி மற்றும் திருமணத்திற்கு ஒரு பெரிய நிதியை உருவாக்க இந்தத் திட்டம் உதவும். இத்திட்டத்தில் மாதம் 250 ரூபாய் வரை முதலீடு செய்து லாபம் ஈட்டலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனாவின் சில முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் நன்மைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். சுகன்யா சம்ரிதி யோஜனாவின் (SSY) திட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு 10 வயதுக்குள் எந்த நேரத்திலும் SSY கணக்கைத் திறக்கலாம்.
எத்தனை கணக்குகள்
பொதுவாக, ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண்குழந்தைகளுக்கு SSY கணக்குகளைத் திறக்கலாம். இரட்டைக் குழந்தைகள் அல்லது ஒரே பிரசவத்தில் மூன்று பெண்குழந்தைகள் பிறந்தால், இரண்டுக்கும் மேற்பட்ட கணக்குகளைத் திறக்க அனுமதி உண்டு.
இந்தத் திட்டத்தில் கணக்கு திறந்த நாளிலிருந்து அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை பணம் செலுத்தலாம். முதலீடு மற்றும் லாக்-இன் காலம்: உங்கள் மகள் பிறந்த உடனேயே கணக்கைத் திறந்தால், 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். அதன் பிறகு 6 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் நீங்கள் எந்த முதலீடும் செய்யத் தேவையில்லை, ஆனால் உங்கள் முதலீட்டிற்கு வட்டி தொடர்ந்து கிடைக்கும்.மகளுக்கு 18 வயதாகும்போது, முதிர்வுத் தொகையில் 50% வரை எடுக்கலாம். மீதமுள்ள தொகையை மகளுக்கு 21 வயதாகும்போது முழுமையாக எடுக்கலாம்.
குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீடு: ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250 மற்றும் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டை தவணைகளாகவோ அல்லது ஒரே தொகையாகவோ செலுத்தலாம். இத்திட்டத்தில் சேர்ந்து 15 ஆண்டுகள் தவறாது பணம் செலுத்தி வரும் பட்டத்தில் குறைந்தது பத்து லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். அதனை கல்லூரி படிப்பு மற்றும் திருமணத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
வரி சலுகை
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு வரி சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரி சலுகைகள் கிடைக்கும். SSY திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் பிரிவு 80சி-யின் கீழ் வரி விலக்குகளை பெற தகுதியுடையவை. வருமானவரிச் சட்டத்தின் 10-வது பிரிவின் கீழ் SSY கணக்கின் கீழ் திரட்டப்படும் வட்டிக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. SSY திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று அதன் நீண்ட கால சேமிப்பு. 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும் இந்தத் திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.