MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • டிரம்ப் vs எலான்: மோதல் உச்சம், டெஸ்லாவுக்கு ரூ.13 லட்சம் கோடி நஷ்டம்!

டிரம்ப் vs எலான்: மோதல் உச்சம், டெஸ்லாவுக்கு ரூ.13 லட்சம் கோடி நஷ்டம்!

டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியதால், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14% சரிந்து, 150 பில்லியன் டாலர் (ரூ.13 லட்சம் கோடி) நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

3 Min read
Author : Vedarethinam Ramalingam
| Updated : Jun 06 2025, 03:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
எதிரிகளான நண்பர்கள்
Image Credit : Getty

எதிரிகளான நண்பர்கள்

சமீபத்தில் நண்பர்களாக இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் தற்போது தமிழ் திரைப்படங்களில் வரும் எம்ஜிஆர் நம்பியார் போல எதிரிகளாக மாறியுள்ளனர்.இதனால் டிரம்ப் அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், எலான் மஸ்க்கிற்கோ கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14% சரிந்ததால் ஒரே நாளில் 150 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாயாகும்.

27
ஒப்பந்தம் ரத்து செய்ததால் எழுந்த பிரச்சினையா?
Image Credit : Getty

ஒப்பந்தம் ரத்து செய்ததால் எழுந்த பிரச்சினையா?

அமெரிக்க அரசின் நாசா மற்றும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு இடையேயான ஒப்பந்தங்களை ரத்து செய்யப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்தே பங்குகள் மிக வேகமாக வீழ்ச்சி அடைய துவங்கியது. டிரம்ப் கொண்டு வந்த பிக் பியூடிப்புல் பில் என்ற மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்தால் அதற்கு டிரம்ப் பதிலடி கொடுத்தார்.மஸ்குடன் பேச்சுவார்த்தை நடத்துவது கடினமாகிவிட்டதாகவும், அவர் அதிகமாக எதிர்வினை புரிவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

Related Articles

Related image1
எதிரும், புதிருமாக மாறிய மஸ்க் Vs டிரம்ப்: மோதலுக்கான 7 காரணங்கள்
Related image2
அமெரிக்க குடியுரிமை பெற 'கோல்டு கார்டு' திட்டம்! அதிபர் டிரம்ப் அறிவிப்பு!!
37
சொன்னது நான்தான் - டிரம்ப் பதில்
Image Credit : Getty

சொன்னது நான்தான் - டிரம்ப் பதில்

அதிபர் தேர்தலில் வென்று டிரம்ப் ஆட்சியைப் பிடித்த சமயத்தில் டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் மஸ்கிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. அவர் அரசு செலவுகளைக் குறைக்க டாஜ் துறையை வழிநடத்தினார். அவர் கடந்த வாரம் தான் இந்த டாஜ் துறையில் இருந்து விலகிய நிலையில், இப்போது இருவருக்கும் இடையேயான மோதல் போக்கு உச்சத்தை தொட்டுள்ளது . இதற்கிடையே எலான் மஸ்க்கை நான் தான் அரசில் இருந்து விலகச் சொன்னதாக டிரம்ப் கூறியிருக்கிறார்.

47
கடுமையாக விமர்சித்த டிரம்ப்
Image Credit : Getty

கடுமையாக விமர்சித்த டிரம்ப்

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்த டிரம்ப், எலானை வெளியேறும்படி நான்தான் கேட்டுக் கொண்டேன் என்றும் அவரது எலெக்ட்ரிக் கார்கள் மீது யாருக்கும் விருப்பம் இல்லாததால் எலெக்ட்ரிக் கார்களை வாங்கக் கட்டாயப்படுத்திய ஆணையை தான் ரத்து செய்ததாக கூறினார். மேலும் இதனால் கோபம் கொண்டே அவர் பைத்தியம் போல் நடந்துகொள்கிறார் எனவும் டிரம்ப் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து இருந்தார். இந்த மோதல் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் விலையை கடுமையாக குறைத்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் டெஸ்லா நிறுவன பங்குகளை விற்று வெளியே தொடங்கிய நிலையில், அடுத்து எலான் மஸ்க் என்ன சொல்ல போகிறார் என்று நெட்டிசன்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதைவிட அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் எதிர்வினையை என்ன என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

57
ரூ.13 லட்சம் கோடி நஷ்டமா?
Image Credit : ANI

ரூ.13 லட்சம் கோடி நஷ்டமா?

டெஸ்லா பங்குகள் இதற்கிடையே டிரம்ப் உடனான மோதல் காரணமாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால் டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 150 பில்லியன் டாலருக்கும் மேல் குறைந்தது. கடந்த ஐந்து நாட்களில் டெஸ்லா பங்குகள் நான்கு நாட்கள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் உடன் மோதல் உச்சமடைந்த நிலையில், டெஸ்லா சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் கீழ் சென்றுள்ளது. இப்போது டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 916 பில்லியன் டாலராக உள்ளது. டெஸ்லா வரலாற்றில் ஒரே நாளில் அதன் மதிப்பு இந்தளவுக்குச் சரிந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் டெஸ்லாவின் பங்கு மதிப்பு 150 பில்லியன் சரிந்துள்ளது. அதாவது இது இந்திய மதிப்பில் ரூ.13 லட்சம் கோடியாகும்.

67
அரசியலில் குதிக்கிறாரா? எலான் மஸ்க்!
Image Credit : Getty

அரசியலில் குதிக்கிறாரா? எலான் மஸ்க்!

அமெரிக்க அதிபருக்கே தண்ணீர் காட்டும் எலான் மஸ்க், பிஸ்னஸ்சை விட்டுவிட்டு அரசியலில் இறங்கி உலகத்தையே அதிக வைக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் இணையத்தில் ட்வீட் செய்து வருகின்றனர். ஆனால் அது அவருக்கு சரிபட்டு வராது என்று எலான் மஸ்க் குடும்பத்தினர் ஜாலியாக பதில் அளித்து வருகின்றனர். இந்திய அரசியலில் எதுவும் நடக்கும், ஆனால் அமெரிக்க அரசியலில் அதுபோல் நடக்குமா என காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

77
"இருந்தாலும் நான்தான் நம்பர் ஒன்"
Image Credit : ANI

"இருந்தாலும் நான்தான் நம்பர் ஒன்"

எலான் மஸ்க், உலகின் மிகப்பெரிய பணக்காரர், சமீபத்தில் தனது சொத்து மதிப்பில் 3 லட்சம் கோடியை இழந்துள்ளார். இந்த இழப்பின் முக்கிய காரணம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான அரசியல் மோதல் மற்றும் அதன் விளைவாக டெஸ்லா பங்குகள் 14% வீழ்ச்சியடைந்ததே காரணம். இந்த பங்குச் சரிவால் டெஸ்லாவின் சந்தை மதிப்பு சுமார் $150 பில்லியன் குறைந்தது, இது மஸ்கின் சொத்து மதிப்பில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், மஸ்க் தற்போது $388 பில்லியன் (₹32,40,000 கோடி) சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பணக்காரராகத் திகழ்கிறார்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
Elon Musk
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப் டெஸ்லா
வணிகம்
முதலீடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஈரானிடம் நடுங்கும் டிரம்ப்... அமரிக்க கப்பல்களுக்கு தண்ணீருக்கு அடியில் புதை குழி தோண்டிய காமெனி..!
Recommended image2
ஈரானுடன் போருக்கு தயாரான அமெரிக்கா..! வண்டவாளம் ஏறப்போகும் வல்லரசின் பெருமை..! பீதியில் ட்ரம்பின் ராணுவம்..!
Recommended image3
ரூ.15.44 லட்சம் கோடி இந்தியர்களுக்கு கிடைக்குமா..? ட்ரம்ப் விதித்த வரி.. அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Related Stories
Recommended image1
எதிரும், புதிருமாக மாறிய மஸ்க் Vs டிரம்ப்: மோதலுக்கான 7 காரணங்கள்
Recommended image2
அமெரிக்க குடியுரிமை பெற 'கோல்டு கார்டு' திட்டம்! அதிபர் டிரம்ப் அறிவிப்பு!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved