மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. சென்னையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை - இறப்புக்கு காரணம் என்ன?
பொதுவாக தனிமை உணர்வு, நிதி நெருக்கடி, மனநலப் பிரச்சினைகள், குடும்ப பிரச்சனைகள், தொழில் சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட காரணிகளால் தான் அதிக அளவில் தற்கொலைகள் நடப்பதாக கூறப்படுகிறது.

மக்களை பொருத்தவரை போலீஸ் அதிகாரிகள் என்பவர்கள் இரும்பு நெஞ்சம் கொண்டவர்கள் என்றுதான் பல இடங்களில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கடந்த சில நாட்களாக அரங்கேறும் சில சம்பவங்கள் பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு கோவை சரக்க டிஐஜி விஜயகுமார் காலை நடை பயிற்சி முடித்துவிட்டு முகாமிற்கு திரும்பிய பொழுது, தனது உதவியாளரின் துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருவாரூரில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் திடீர் மரணம்
இன்னும் அந்த அதிர்வலைகளில் இருந்தே தமிழக மக்கள் மீளாத நிலையில், சென்னை அயனாவரத்தை சேர்ந்த அருண்குமார் என்ற காவலர், வீட்டில் சீருடை அணிந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. உறுதியான நெஞ்சம் கொண்ட காவல்துறையினரே இப்படி தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிஐஜி விஜயகுமார் வழக்கை போலவே அருண்குமார் வழக்கிலும், அவர் வீட்டு பிரச்சினையினால் தூக்கிட்டுக் கொண்டாரா? அல்லது பணிச்சுமையினால் தூக்கிட்டுக் கொண்டாரா? என்பது தெரியவில்லை. தற்பொழுது இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
பொதுவாக தனிமை உணர்வு, நிதி நெருக்கடி, மனநலப் பிரச்சினைகள், குடும்ப பிரச்சனைகள், தொழில் சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட காரணிகளால் தான் அதிக அளவில் தற்கொலைகள் நடப்பதாக கூறப்படுகிறது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் FIR வெளியானது! தற்கொலைக்கு இதுதான் காரணம்! அதிர்ச்சி தகவல்!
எந்த ஒரு கஷ்டத்திற்கும் தற்கொலை எப்போதுமே தீர்வாகாது.. நம்மை நேசிக்கும் பலருக்கு அது பேரிடியாக அமையும்.