தென் தமிழக ரயில் சேவையில் மாற்றம்.. ஜூலை 11 வரை இந்த ரயில்கள் ரத்து.. விவரம் உள்ளே..
தென் தமிழகத்தின் ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி- மீளவிட்டான் இடையே இரட்டை ரயில் பாதை அமைப்பு பணிகள் தொடர்பாக 6 ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. மதுரை ரயில்வே இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தூத்துக்குடி – மீளவிட்டா தடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையில் சிக்னல் மாற்ற உட்பட பொறியியல் துறை சார்ந்த சில பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இந்த தடத்தில் ரயில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 6 ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்படுகின்றன.
முழுமையாக ரத்து : தூத்துக்குடி – வாஞ்சிமணியாச்சி சிறப்பு ரயில் ( 06847), வாஞ்சிமணியாச்சி – தூத்துக்குடி சிறப்பு ரயில் (06672) ஆகிய 2 ரயில்களும் ஜூலை 10-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. வாஞ்சிமணியாச்சி – தூத்துக்குடி சிறப்பு ரயில் ( 06848), தூத்துக்குடி – வாஞ்சிமணியாச்சி சிறப்பு ரயில் ( 06671), திருநெல்வேலி – தூத்துக்குட் சிறப்பு ரயில் (06668), தூத்துக்குடி – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06667) ஆகியவை ஜூலை 11-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பகுதியளவில் ரத்து : மும்பை – தூத்துக்குடி – மும்பை சிறப்பு ரயில்கள் (01143, 01144) ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி – தூத்துக்குடி – கோவில்பட்டி இடையே ரத்து செய்யப்படும். மைசூரு – தூத்துக்குடி – மைசூரு விரைவு ரயில்கள் (16235, 16236) சிறப்பு ரயில்கள் ஜூலை 11-ம் தேதி வாஞ்சிமணியாச்சி – தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி இடையே ரத்து செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆடி அமாவாசனை சிறப்பு யாத்திரை” நெல்லை - காசி இடையே பாரத் கௌரவ் சிறப்பு ரயில்