“ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை” நெல்லை - காசி இடையே பாரத் கௌரவ் சிறப்பு ரயில்
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஹரித்துவார் மற்றும் வாரணாசியில் உள்ள சிறப்பு கோவில்களை சுற்றிப்பார்க்கும் விதமாக 12 நாட்கள் பயணிக்கும் வகையில் பாரத் கௌரவ் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பயணச் செலவும் குறைவு, பயண அசதியும் குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். பயணிகளின் விருப்பத்தை ஈடு செய்யும் விதமாக இந்திய ரயில்வே முக்கிய நாட்களில் பாரத் கௌரவ் என்ற பெயரில் சிறப்பு இடங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
ஜூலை மாதம் 1ஆம் தேதி பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலானது, கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் வழியாக ஹைதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவி தேவி, அமிர்தரஸ் புது டெல்லி ஆகிய இடங்களில் அமைந்துள்ள முக்கிய கோவில்கள் மற்றும் சிறப்பு சுற்றுலா தலங்களுக்கு இயக்கப்பட்டது.
’இது அரிவாள் பிடித்த கை, பயமுறுத்தி அரசியல் பண்ண நினைத்தால் நடக்காது’ - அண்ணாமலை காட்டம்
அந்த வகையில், ஹரித்வார் மற்றும் வாரணாசியில் உள்ள கோவில்களை சுற்றி பார்க்க ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை என்ற பெயரில் 12 நாட்கள் பாரத் கௌரவ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கொச்சுவேலியில் இருந்து ஆகஸ்ட் 7ம் தேதி நல்லிரவு புறப்படும் இந்த ரயில் நெல்லை, மதுரை, திருச்சி மற்றும் சென்னை வழியாக குஜராத் பனாரஸ் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் சாதாரண பெட்டியில் பயணிப்பதற்கு 22 ஆயிரத்து 350 ரூபாயும், 3ம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் பயணிக்க 40 ஆயிரத்து 350 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் பற்றி அறிய 8287932122, 9003140680 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.